மாலத்தீவிலும், மொரீஷியஸிலும் பிரபலமாக அறியப் படுவதுடன் இந்தியாவிலும் வேகமாக வளர்ந்துவரும் நிறுவனமான ரெனாடஸ் புராஜெக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், கான் (GAN) பன்னாட்டு விமான நிலையத்தை விரிவுபடுத்தவும் மற்றும் அதன் உட்கட்டமைப்பை தரம் உயர்த்தவும் $29 மில்லியன் யுஎஸ் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தத்தை மாலத்தீவு அரசாங்கத்திடமிருந்து பெற்றிருக்கிறது.
சென்னையை தலைமை யகமாக கொண்டு இந்நிறு வனம் இயங்கி வருகிறது.
இந்த விரிவாக்க திட்டத்தில் விமானப் போக் குவரத்து கட்டுப்பாடு கோபுரம், தீயணைப்பு நிலையம் ஆகிய கட்டுமானப் பணிகளும் மற்றும் தற்போதுள்ள முனை யம், வாகன நிறுத்த அமைவிடங்கள், சாலைகள், டியூட்டி ஃப்ரீ ஷாப்ஸ் மற்றும் உணவகங்களை புதுப்பித்தல், தரம் உயர்த்தல் பணிகளும் உள்ளடங்கும். இந்த மாதத் தில் தொடங்கப்பட வுள்ள இச்செயல்திட்டம் 2025ம் ஆண்டுக்குள் நிறைவ டையும்.
புரிந்துணர்வு
மாலத்தீவுக்கான இந்திய தூதர் முனு மஹா வர் மற்றும் மாலத்தீவு அரசின் பல அமைச்சர்கள் முன்னிலையில், அட்டு இன்டர்நேஷனல் விமான நிலைய நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கெய்ஸ் நசீர், ரெனாடஸ் புராஜெக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்- ன் தலைவர் செல்வசுந்தரம் பூசப்பன் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டனர்.
மாலத்தீவுகள் நாட்டில் இக்குழுமம் ஏற்கனவே நான்கு உட்கட்டமைப்பு புராஜெக்ட்டுகளை மேற்கொண்டு வருகிறது. ரெனாடஸ் நிறுவனத்தின் தலைவர் செல்வசுந்தரம் பூசப்பன் கூறியதாவது: உட்கட்டமைப்பு மற்றும் வீட்டுவசதி செயல் திட்டங்களின் வழியாக 2030-ம் ஆண்டுக்குள் குழுமத்தின் விற்று முதல் இலக்கான ரூ. 3,500 கோடியை அ¬ டவதற்கு தயார் நிலையில் இருக்கிறது என்றார்.
அட்டு இன்டர்நேஷனல் விமானநிலைய செயல் திட்டம் பற்றி இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மனோஜ் பூசப்பன் பேசுகையில், மாலத்தீவுகளின் தென் பிராந்தியத்தில் சுற்றுலா செயல்பாட்டிற்கு இச்செயல்திட்டம் மிகப்பெரிய ஊக்கத்தை வழங்கும் என்றார்.



