கோவை தி சம்ஹிதா அகாடமி பள்ளியின் சார்பாக போதைப்பொ ருள் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி கடந்த 25-ம் தேதி எஸ்பிடி மைதானத்தில் நடந்தது.
மலுமிச்சம்பட்டி ஊராட்சி பஞ்சாயத்து துணைத் தலைவர் சதிஷ், பள்ளி முதல்வர் புஷ்பஜா ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள், பள்ளி உதவியாளர்கள், பாது காவலர்கள் அனைவரும் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
விழிப்புணர்வு பதாகைகளுடன் பேரணியில் பங்கேற்றனர்.
பேரணியின் முடிவில் மலுமிச்சம்பட்டி ஊராட்சி பஞ்சாயத்து துணைத் தலைவர் சதிஷ், மலு மிச்சம்பட்டி பகுதியில் போதைப் பொருள் துஷ்பிரயோ
கத்தினால் ஏற்படும் விளைவுகளை எடுத்துரைத்தார்.
தி சம்ஹிதா அகாடமி பள்ளி மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் போதைப் பொருள் ஒழிப்பு குறித்து பேசினர். பாதுகாப்பு ஏற்பாடுகளை செட்டிப்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.



