அரச குடும்பங்களுக்கு நகை களை வடிவமைத்து வழங்கிய 150 ஆண்டு பாரம்பரியமிக்க சி. கிருஷ்ணய்யா செட்டி ஜூவல் லரி குழுமம் சார்பில் சென்னை, மைலாப்பூரில் உள்ள விஜே ஜூவல்லரி விஷன், சம்மர் பேலசில் மார்ச் 25 முதல் 27 வரை 3 நாட்கள் நகைகள் கண்காட்சி நடைபெற உள்ளது.
கண்காட்சியை தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் டாக்டர் என். அருள் நடராஜன், திரைப்பட தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
சி. கிருஷ்ணய்யா செட்டி ஜூவல்லர்ஸ் குழுமத்தின் நகைகள், ரத்தின கற்கள், மஞ்சள், ஆரஞ்சு நிறத்திலான சிட்ரைன் கற்கள், முத்துக்கள், மாணிக்க கற்கள் மற் றும் சிறந்த வைரங்களுடன் கூடிய அரிய வகை கற்களைக் கொண்ட நகைகள் உன்னதமான பாரம்பரிய பாணியின் உணர்வைக் கொண்டு வருகின்றன.
விற்பனை
ரேர் சென்ட் குறித்து சி. கிருஷ்ணய்யா செட்டி நகைக் கடையின் செயல் இயக்குநர் சைதன்யா வி கோதா கூறுகையில், ஆடம்பர வாசனை திரவியங்களை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் துவக்கப்பட்டது. ஆடம்பரமிக்க மற்றும் அழகான நகைகளின் வடிவமைப்பிற்கேற்ப வாசனை திரவியமும் மிகவும் சிறப்பாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்றார்.
அக்ஷய திருதியை சிறப்பு சலுகையாக 1 காரட் வைர நகை வாங்குபவர்களுக்கு 2 கிராம் தங்க காசு, 1 கிராம் தங்கம் வாங்குபவர்களுக்கு 3 கிராம் வெள்ளிக் காசு இலவசமாக வழங்கப்படுகிறது.



