கோவையில் மேக்ஸ்வெல் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக மகளிர் தின நலத்திட்ட விழா நடைபெற்றது. காவல் உதவி ஆணையாளர் பசீனா பீவி மற்றும் காட்டூர் காவல் ஆய்வாளர் வடிவுக்கரசி ஆகியோர் தலைமை தாங்கினர்.
விழாவில் 55 ஏழை குடும்பங்களுக்கு வேஷ்டி சேலை மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. ஏழைப் பெண்கள் தொழில் தொடங்குவதற்கு தொழில் ஊக்கத்தொகை ரூபாய் 10000 வீதம் 10 நபர்களுக்கும் கல்வி ஊக்கத்தொகை ரூ.5000 வீதம் 10 நபர்களுக்கும் வழங்கப்பட்டது.
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங் கப்பட்டது. விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது.
விழாவில் பேசிய உதவி ஆணையாளர் பசீனா பீவி பெண்கள் பாதுகாப்பு குறித்தும் ஆன்லைன் சூதாட்டங்கள் குறித் தும் காவலன் செயலி பற்றியும் விளக்கினார்.
மேலும் விழாவில் ட்ரஸ்ட் நிறுவனர் டாக்டர் மா முருகன் ட்ரஸ்டி அந்தோணி ராஜ் உட்பட விஜய் டிவி பிரியங்கா, ஆர்ஜே.யுவராணி, கிருத்திகா, பாரதி, தீபிகா உள்பட பல்துறை சாதனைப் பெண்கள் கலந்து கொண்டனர்.



