fbpx
Homeபிற செய்திகள்கிருஷ்ணகிரி மாவட்ட அரசு இசைப்பள்ளியில், தமிழிசை விழா

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு இசைப்பள்ளியில், தமிழிசை விழா

சேலம் மண்டல கலை பண்பாட்டுத்துறை சார்பில், கிருஷ்ணகிரி மாவட்ட அரசு இசைப்பள்ளியில், தமிழிசை விழா, இசைப்பள்ளியின் 24ம் ஆண்டு விழா மற்றும் ஜவகர் சிறுவர் மன்ற ஆண்டு விழா நேற்று நடந்தது.

ஓசூர் கலைசுடர்மணி சந்தோஷ்குமார் ஆறுமுகம் தமிழிசை வழங்கினார். மாவட்ட இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் கானமூர்த்தி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக கிருஷ்ணகிரி காங்கிரஸ் எம்.பி., செல்லக்குமார், சென்னை கலைப் பண்பாட்டுத்துறை கலையியல் அறிவுரைஞர் ஜாகீர் உசேன் ஆகியோர் சிறப்புரையாற்றி ஜவகர் சிறுவர் மன்ற மாணவ, மாணவியருக்கு பரிசு மற்றும் சான்றிதழை வழங்கி பாராட்டினர்.

நிகழ்ச்சிகள்

தொடர்ந்து, ஸ்ரீரங்கம் ஜோதிசர்மா மற்றும் குழுவினரின் புல்லாங்குழல் இசையும், இசை திலகம் ஆசார்ய ரத்னா ருக்மணி கிருஷ்ணா மற்றும் குழுவினரின் தமிழிசையும் வழங்கினர். மேலும் மாலை 6:15 மணிக்கு ஜவஹர் சிறுவர் மன்ற மாணவ, மாணவியரின் இசை, யோகா, பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடந்தன.

நிகழ்ச்சியில், தவில் ஆசிரியர் கலைமாமணி சீனிவாசன், பரதநாட்டிய ஆசிரியை திரிவேணி, தேவார ஆசிரியர் கதிர்வேல், வயலின் ஆசிரியர் ராமபிரசாத், நாதஸ்வர ஆசிரியர் ராமமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தற்போது மாவட்ட இசைப்பள்ளியில், குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகியவை பிரிவில் 2023–24ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருவதாக மாவட்ட இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் கானமூர்த்தி தெரிவித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img