fbpx
Homeபிற செய்திகள்ஸ்ரீராமகிருஷ்ணா கலைக் கல்லூரியில் வணிகப் பகுப்பாய்வு கருத்தரங்கம்

ஸ்ரீராமகிருஷ்ணா கலைக் கல்லூரியில் வணிகப் பகுப்பாய்வு கருத்தரங்கம்

கோவை நவஇந்தி யாவில் உள்ளி ஸ்ரீராமகி ருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மேலாண்மைத்துறை (எம்.பி.ஏ.) சார்பில், “வணிகப் பயன்பாட்டு தரவுகளை மீண்டும் கண் டறிதல்” என்ற தலைப்பில் ஒரு நாள் தேசிய அளவிலான வணிகப் பகுப்பாய்வு கருத்தரங்கம் கல்லூரி கலையரங்கில் நடந்தது.
கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் தலைமை வகித்தார்.

மேலாண்மைத்துறை இயக்குநர் முனைவர் ஜெ.பாமினி வரவேற்றார்.
கோவை ரூட்ஸ் குழும நிறுவனங்களின் முதன்மை நிதி அலுவலர் ரவி கருத்தரங்கைத் தொடங்கி வைத்து பேசினார்.

ஸ்டார்ட் அப்

கோவை சாஸ் ஸ்டார்ட் அப் தரவு அறிவியல் தலைவர் முனைவர் எம்.செல்வராஜூ, ஜி.கே.என்.எம். மருத்துவமனை தலைமை தகவல் அதிகாரி பிஜூவேலாயுதன் ஆகியோர் பேசினர்.

கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 450 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை முனைவர் என்.பிரேமானந்த், முனைவர் என்.அம்சவேணி, முனைவர் பி.மெர்சலின் அனிதா, முனைவர் டி.திவ்யா மற்றும் மாணவர் கள் செய்திருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img