fbpx
Homeபிற செய்திகள்சேலம் மாநகராட்சியில் ரூ.3.33 கோடியில் திட்டப்பணிகள் துவக்கம்

சேலம் மாநகராட்சியில் ரூ.3.33 கோடியில் திட்டப்பணிகள் துவக்கம்

சேலம் மாநகராட்சி சூரமங்கலம் , கொண்டலாம்பட்டி மண்டலப் பகுதிகளில் ரூ.3.33 கோடி மதிப்பிலான சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.
மாநகராட்சி மேயர் ஆ.இராமச்சந்திரன் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.இராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர் .

சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலம் கோட்டம் எண்.19 க்கு உட்பட்ட காந் திநகர் , தியாகபிரம்மா தெரு, வால்மீகி தெரு, தர்மநகர் 5-வது குறுக்குத்தெரு பகுதிகளில் ரூ 58 லட்சம் மதிப்பில் புதிதாக தார்சாலை அமைக்கும் பணி, பெரியார் தெருவில் ரூ..8.58 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைத்தல், கோட்டம் எண். .22 ஆண்டிப்பட்டி காலனியில் கல்வி நிதியிலிருந்து ரூ.54 லட்சம் மதிப்பில் நூலகக் கட்டிடம், கோட்டம் எண் 2 கோபால் நகரில் ரூ.16.30 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைத்தல், கோட்டம் எண் .2 காமராஜர் காலனி மெயின் ரோட்டில் ரூ 8.60 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைத்தல், கோட்டம் எண் .3 வன்னியர் நகரில் ரூ .10 லட்சம் மதிப்பில் வடிகால் அமைத்தல், கோட்டம் எண் 3 திரு.வி.க. நகரில் ரூ.10 லட்சம் மதிப்பில் வடிகால் அமைத்தல், கோட்டம் எண் .3 எக்ஸ் சர்வீஸ்மேன் காலனி மெயின் ரோட்டில் ரூ.38.50 லட்சம் மதிப்பில் சாலை மற்றும் வடிகால் அமைத்தல் என 7 சாலை மற்றும் வடிகால் அமைக்கும் பணிகள் மற்றும் நூலக கட்டிடம் ரூ.2.03 கோடி மதிப்பிலான பணிகளுக்கு பூமிபூஜை செய்து பணிகள் துவக்கி வைக்கப்பட்டன.

பூமிபூஜை

கொண்டலாம்பட்டி மண்டலம் கோட்டம் எண் 58 பராசக்தி நகரில் ரூ.13.25 லட்சம் மதிப்பில் தார்சாலை, கோட்டம் எண் .54 கவுன்சிலர் அருணாச்சலம் தெருவில் ரூ.14.45 லட்சம் மதிப்பில் தார்சாலை, கோட்டம் எண்.47-ல் சமுதாய நலக்கூடுதல் கட்டிடம் ரூ.15 லட்சம் மதிப்பில் கட்டிடம், கோட்டம் எண் .60 சீலநாயக்கன்பட்டியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.85 லட்சம் மதிப்பில் மக்காத உலர் குப்பையை தரம் பிரிக்கும் மையத்திற்கான பூமிபூஜை என 4 பணிகள் ரூ.1.86 கோடி மதிப்பில் நடைபெறவுள்ளன.

இந்நிகழ்ச்சியில் மண்டலக் குழுத்தலைவர் மா.அசோகன் நிலைக்குழுத் தலைவர்கள் ஜி.குமரவேல், ஆர்.பி.முருகன், நியமனக்குழு உறுப்பினர் ஆ.தமிழரசன், மாமன்ற உறுப்பினர்கள் சி.பன் னீர்செல்வம், பொ.பிரதீப் , செ.ஆ.வரதராஜ், தேன்மொழி, செயற்பொறியாளர்கள் க.திலகா , ஆர்.செந்தில் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர்.

படிக்க வேண்டும்

spot_img