தமிழகத்திலேயே வேறெந்த மாவட்டத்திலும் இல்லாத இயற்கை நீரூற்று கசக்கால் வாய்கள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் மீட்டெடுக்கப்பட்டு சீரமைக்கப்பட்டு வரு கின்றன ராணிப்பேட்டை மாவட்டத்தில் நீர்வளத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன், நேற்று (ஜன.11) செய்தியாளர்களை அழைத்துச் சென்று திட்ட பணிகளை விவரித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டம் கரிவேடு ஊராட்சியில் உள்ள கசக்கால்வாயினை உலக வங்கியின் நிதி ரூ.1.65 கோடி மதிப்பீட்டில் சீரமைத்து தற்போது, இயற்கை நீரூற்றில் நீர் சேகரிக்கப்பட்டு, கால்வாயில் இயற்கை நீர் ஊற்று தண்ணீர் சென்று கொண்டிருப்பதையும், கரிவேடு பெரிய ஏரி தூர்வாரப்பட்டு புனரமைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார்.
ராணிப்பேட்டை மாவட் டம், நீர்வளத்துறையின் கட் டுப்பாட்டில் மொத்தம் 369 ஏரிகள் உள்ளன. இவற்றில் தற்போது உலக வங்கி நிதியின் மூலம் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தில் வேகவதி உபவடிநில பகுதியில் ஆற்காடு வட்டத்தில் 7 ஏரிகள், வாலஜா வட்டத்தில் 3 ஏரிகள், நெமிலி வட்டத்தில் 2 ஏரிகள் மற்றும் 2 கால்வாய்களிலும் புரைமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த 12 ஏரிகளின் வாயிலாக மொத்தம் 1213 ஹெக்டேர் விளைநிலங்கள், 2310 விவசாய பெருமக்கள் பயனைடகின்றனர். தாமல் கால்வாய் மற்றும் கசக்கால்வாயின் முலம் செல்கின்ற நீரானது, தாமல் ஏரியினை அடைந்து அங்கிருந்து காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள 32 ஏரிகளுக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு விவசாய நிலம் பாசனம் பெறுகின்றது.
மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: ராணிப்பேட்டையின் சிறப்பம்சமாக 23 கசக்கால்வ £ய்கள் உள்ளன. தாமல் கசக்கால்வாயானது ராணிப் பேட்டை வட்டம் ஓச்சேரி அருகே கரிவேடு கிராமத்தில் துவங்கி 8 கி.மீ சென்று, தாமல் எரியினை சென்றடைகிறது.
ஆற்றில் வெள்ளநீர் வரும்போதும், மழைக்காலங்களில் கரிவேடு கிராமத்தில் சுற்றி உள்ள பாசன பரப்பு பகுதிகளில் பெறப்படும் மழையினாலும், பாசனப்பரப்பு பகுதிகள் அனைத்தும் குறிப்பிட்ட ஆழத்திற்கு அடியில் மணற்பாங்கான பரப்பாக இருக்கின்ற காரணத்தால் தன்ணீரை ஈர்த்து வைத்துக் கொண்டு பள்ளமாக உள்ள கசக்கால்வாயினை அடைந்து அக்கால்வாயில் மழை நின்ற பின்பும் அடுத்த நான்கு முதல் ஐந்து மாதங்களுக்கு மிகாமல் தண்ணீர் வரத்து இருந்து கொண்டே உள்ளது.
இக்கசக்கால்வாயின் மூலம் நீர் தாமல் ஏரிக்கு சென்றடைவ தால் தாமல் ஏரியில் பாசனத் திற்காக தண்ணீர் எடுப்பதால் குறைகின்ற நீர்மட்ட அளவினை இக்கசக்கால்வாய் ஈடுசெய்கின்றது.
இதனால் 8 கி.மீ. தொலைவிலுள்ள தாமல் ஏரிக்கு கிட்டத்தட்ட 30 முதல் 80 கன அடி வரை தண்ணீர் கிடைக்கின்றது. இந்த கசக்கால் வாயின் அகலமானது 4 முதல் 8 அடி வரை உள்ளது.
இதிலிருந்து தொடர்ந்து கிடைக்கும் நீரானது தாமல் ஏரிக்கு சென்று அது நிரம்பிய பிறகு வழியும் நீரானது திருவண்ணாமலை மாவட்டத் திலுள்ள 15 ஏரிகளுக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள 17 ஏரிகளுக்கும் என மொத்தமாக 32 ஏரிகளுக்கு செல்கிறது. இந்த நீரானது தொடர்ந்து வருவதன் காரணமாக மூன்று போகம் பயிரிட ஏதுவாக உள்ளது என காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் தாமல் கசக்கால்வாயினை பாராட் டுகின்றனர்.
நிரம்பின ஏரிகள்
3 போகம் விளைச்சல்
தாமல் ஏரி மற்றும் அதன் கீழுள்ள மற்ற ஏரிகளிலும் தண்ணீர் வரவிற்கு ஏற்ப இரண்டு முதல் மூன்று போகம் விளைச்சல் மேற்கொள்ளப்படுகிறது. இந்த இரண்டு கால்வாய்களும் மழைக்காலத்திற்கு முன்பே தூர்வாரப்பட்ட காரணத்தால் இக்கால்வாயின் மூலம் பயன் பெறும் அனைத்து ஏரிகளும் நிரம்பி 15 நாட்களுக்கு மேலாக வழிந்தோடுகின்றன.
கசக்கால்வாயின் மூலம் நேரடி பாசனத்திற்கும் பனப்பாக்கம் ரெட்டிவலம் ஏரிகளுக்கும் சென்று சேருகின்றன. தாமல் ஏரியின் மூலம் 1300 ஹெக்டேர் பரப்பளவில் விவசாயத்திற்கு பயன்படுகிறது. நீர்வள உபவடிநில மேம்பாட்டு திட்டத்தின் மூலம் உலக வங்கி நிதி ரூ.1.65 கோடி மதிப்பீட்டில் இந்த கசக்கால்வாய் சீரமைக்கப்பட்டுள்ளது.
23 கசக்கால்வாய்கள்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மட்டுமே இதுபோன்ற சிறப்புமிக்க 23 கசக்கால்வாய்கள் உள்ளன. அதேபோன்று, நீராதாரங்களை பெருக்குவதில் கசக்கால்வாய்கள் முக்கியப் பங்காற்றுகின்றன.
இந்த கசக்கால்வாய்கள் தூர் வாரப்பட்டதன் காரணமாக கடந்த ஆண்டில் 6.23 மீ. என இருந்த நிலத்தடி நீர்மட்டம் அளவானது இந்த ஆண்டு 4.3 மீட்டராக உள்ளது. கிட்டத்தட்ட 1.91 மீட்டர் அளவிற்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து காணப்படுகிறது.
முறையாக கசக்கால்வாய்களை தூர்வாரியதன் காரணமாக 40 ஆண்டுகளுக்கு பின்னர் பனப்பாக்கம் ஏரியானது தற் போது தான் முழுவதுமாக நிரம்பியுள்ளது. அதே போன்று முருங்கை ஏரியும் தோராயமாக 60 – 70 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியுள்ளது.
ஆதலால் இராணிப்பேட்டை மாவட்டத்தில் மீதமுள்ள 22 கசக்கால்வாய்களை தூர்வாரி சீரமைக்கும் பணிகளும், நீரா தாரங்களை பாதுகாக்கும் பணி களும் தொடர்ந்து நடைபெறும்.
கரிவேடு ஏரி கடந்த 40 ஆண்டு காலமாக எந்த பெரிய திட்டத்தின் மூலமாகவும் பணிகள் மேற்கொள்ளபடாத நிலையில், தற்போது புணரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏரிக்கு கோவிந்தவாடி கால் வாயின் மூலம் நேரடியாக நீர்வரத்து கிடைக்கப்பெறுகிறது. ஏரியில் 6 மதகுகளும், 1 கலங்களும் உள்ளன.
ஏரியின் பரப்பு 210.10 ஹெக்டேரும் கரையின் நீளம் 3380 மீட்டராகும். தற் போது 3 மதகுகள் மற்றும் 1 கலங்கள் கட்டுமானங்களை மீளகட்டும்பணி நிறைவுபெற்று கரையினை பலப்படுத்தும் பணி நடைபெற்று வருகின்றன.
ஏரிக்கு வரும் வரத்துக்கால்வாயினை மழைக்காலத்திற்கு முன்பே பணிகள் நிறைவு பெற்ற காரணத்தால் தற்போது ஏரியானது கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக தொடர்ந்து வழிகின்றது.
இதன் மூலம் 210.10 ஹெக்டேர் பாசன பரப்பு முழுவதும் தொடர்ந்து நீர்வழங்கப்பட்டு வருகின்றது. இதன் மூலம் விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.
நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் பிரபாகரன், உதவி பொறியாளர்கள் மெய்யழகன், கரிவேடு பாசன சங்க தலைவர் சிவப்பிரகாசம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.



