fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடியில் பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம்

தூத்துக்குடியில் பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம்

பொங்கலை தமிழர்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் வருகிற 2023-ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்கு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்கள் உள்ளிட்ட 2,19,33,342 குடும்ப அட்டைதாரர்களுக்கு, ரூ2,429/- கோடி மதிப்பிலான கீழ்காணும் பொங்கல்பரிசுத்தொகுப்பு பொருட்கள் வழங்கிட தமிழக அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் போல்பேட்டை-
நியாயவிலைக்கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்கள் விநியோகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் பெ.ஜெகன்பெரியசாமி ஆகியோரால் துவக்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தூத்துக்குடி சார்ஆட்சியர், மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சிவ.முத்துக்குமாரசாமி, மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் மேலாண்மை இயக்குனர் சிவகாமி துணைப்பதிவாளாகள் ரவீந்திரன், மாரியப்பன், மாவட்ட வழங்கல் அலுவலர் அபுல் காசிம், கண்காணிப்பாளர் ஜோசில்வஸ்டர், கூட்டுறவு சார்பதிவாளர் சூரியா, தனிவட்டாட்சியர் ஜஸ்டின் செல்லதுரை மற்றும் அந்தோணி, பட்டுராஜ், கூட்டுறவு சங்க பணியாளர்கள் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img