fbpx
Homeபிற செய்திகள்மாநில அளவிலான கைப்பந்து போட்டி : 38 அணிகள் பங்கேற்பு - சேலம் மாணவர்கள் முதலிடம்

மாநில அளவிலான கைப்பந்து போட்டி : 38 அணிகள் பங்கேற்பு – சேலம் மாணவர்கள் முதலிடம்

தர்மபுரியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி தொடங்கியது. இதில் 38 மாவட்ட அணிகள் பங்கேற்றுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் 63-வது மாநில அளவிலான குடியரசு தின குழு விளையாட்டுப் போட்டிகள் தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. 17 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு வகையான குழு போட்டிகள் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக மாணவிகளுக்கு மாநில அளவிலான வாலிபால் போட்டிகள் நடைபெற்றது.

இதில் 38 மாவட்ட அணிகளை சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர். இந்த போட்டிகளில் சேலம் மாவட்ட அணி முதலிடமும், சென்னை மாவட்ட அணி 2-ம் இடமும், ஈரோடு மாவட்ட அணி 3-ம் இடமும் பிடித்தது.

குடியரசு தின கைப்பந்து போட்டிகள்

இந்த நிலையில் மாணவர்களுக்கு மாநில அளவிலான குடியரசு தின கைப்பந்து போட்டிகள் தர்மபுரி பெரியாம்பட்டி சப்தகிரி பொறியியல் கல்லூரி வளாகத்தில் நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் மாநிலம் முழுவதிலும் இருந்து 38 மாவட்ட அணிகள் பங்கேற்றுள்ளது.

இந்த போட்டிகளை முன்னாள் எம்பி எம்.ஜி.சேகர் தொடங்கி வைத்தார். ராணிப்பேட்டை உடற்கல்வி ஆய்வாளர் பிரபு, நாகப்பட்டினம் உடற்கல்வி ஆய்வாளர் கண்ணன், தர்மபுரி உடற்கல்வி ஆய்வாளர் முத்துக்குமார் ஆகியோர் வீரர்களை அறிமுகம் செய்து வைத்தனர்.

முதல் கட்டமாக கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்ட அணிகளும், விருதுநகர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட அணிகளில் மோதிக்கொண்டது. தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அணி மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினர்.

இந்தப் போட்டிகள் நாக்அவுட் முறையில் நடைபெற்று வருகிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை இறுதி போட்டிகள் நடைபெற உள்ளது.

படிக்க வேண்டும்

spot_img