கயத்தாறு பேரூராட்சி சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. கொரோனா மற்றும் டெங்கு ஒழிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கயத்தாறு பேரூராட்சி மற்றும் மருத்துவ அதிகாரிகள் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, கயத்தாறு பேரூராட்சிக்கு உட்பட்ட 9வது வார்டு கட்டபொம்மன் தெருவில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக கயத்தாறு பேரூராட்சி மன்றம் ஏற்பாட்டில், மருத்துவ அலுவலர்கள் நிலவேம்பு கஷாயம் வழங்கி, கொசு புழு ஒழிப்புக்காக இயந்திரம் மூலம் புகை மருந்து அடிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கயத்தாறு பேரூராட்சி மன்ற தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை, கயத்தாறு கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னப்பாண்டியன் ஆகியோர் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினர்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி இணை ஒருங்கிணைப்பாளர் ராஜதுரை, முன்னாள் பேரூர் கழக செயலாளர் இஸ்மாயில், வழக்கறிஞர் மாரியப்பன், சுகாதார அதிகாரிகள் மற்றும் பேரூராட்சி சுகாதார, துப்புரவு பணியாளர்கள் கலந்துகொண்டனர்.