fbpx
Homeபிற செய்திகள்விஷன் மோடி பிஎம் அமைப்பு சார்பில் கபசுர குடிநீர் நிலவேம்பு விநியோகம்

விஷன் மோடி பிஎம் அமைப்பு சார்பில் கபசுர குடிநீர் நிலவேம்பு விநியோகம்

கோவையில் அதிகரித்து வரும் காய்ச்சல் காரணமாக பொது மக்களுக்கு கபசுர குடிநீர் பொடி வழங்கப்பட்டது. கோவை மாவட் டத்தில் பருவகாலத்தினால் ஏற்படும் காய்ச்சல் அதிகரித்து வருகிறது

இதனால் மருத்துவமனைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இந்து அமைப்புகள் பாரதிய மக்கள் சேவை மையம் மற்றும் மிசன் மோடி பிஎம் அகைன் அமைப்பு சார்பாக அதிகரித்து வரும் காய்ச்சலுக்கு தொற்றுகாரணமாக அனைவருக்கும் இலவசமாக கபசுர குடிநீர் பொடி வீடு வீடாக வழங்கப்பட்டது.

ஏற்கனவே கடந்த கொரோனா நோய் தொற்றின் போது தமிழகத்தில் முதன்முதலாக இந்த அமைப்புகள் ஒன்றிணைந்து இப்பகுதியில் கபசுர குடிநீர் வழங்கியது. அதேபோல மீண்டும் இந்த இயக்கங்கள் கபசர குடிநீர் வழங்குவதை தற்போது தொடங்கியுள்ளது.

தேசிய பொதுச் செயலாளர் ஜெய் ஹிந்து முருகேசன், மாநில தலைவர் கலங்கல் எம் மணி மற்றும் மாநில துணைத்தலைவர் சூலூர் செந்தில்குமார், கோவை மாநகர் மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன், வடக்கு மாவட்ட தலைவர் ராஜேஷ், திருப்பூர் மாவட்ட தலைவர் முத்து, மாநில மகளிர் அணி தலைவி கவிதா லட்சுமி விவாசாய அணி ரத்தினசாமி, ஐடி பிரிவு மாநில தலைவர் கே.எ.குமார் மற்றும் இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .

விஷன் மோடி பிஎம் அகைன் அமைப்பு

முன்னதாக விஷன் மோடி பிஎம் அகைன் அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் ஜெய்ஹிந்த் முருகேஷ் பேசும்போது தமிழகத்தில் நாளுக்கு நாள் தொற்று காய்ச்சல் அதிகரித்து வருகிறது.

இதனால் கபசுர குடிநீர் நிலவேம்பு உள்ளிட்டவை பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்டு நோயின் தீவிரம் குறைந்தது. அதேபோல மீண்டும் அதிகரித்து வரும் காய்ச்சல் காரணமாக கபசுர குடிநீரை பொதுமக்களுக்கு விநியோகிக்க ஆரம்பித் திருப்பதாக தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img