கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின், பி.காம். பி.பி.எஸ். துறை சார்பில், இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சிக் குழுமத்தின் நிதியுதவியுடன், “இந்தியா என்றால் வர்த்தகம்: சீர்திருத்தம், செயல் திறன், மாற்றம்” என்ற தலைப்பில் ஒருநாள் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.
ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் தலைமை வகித்தார்.
பி.காம். பி.பி.எஸ். துறைத்தலைவர் முனைவர் வி.பத்மநாபன் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர் திருச்சி இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் (ஐ.ஐ.எம்.) இயக்குநர் முனைவர் பவன்குமார் சிங், 70 ஆராய்ச்சிக் கட்டுரைகளின் தொகுப்பை வெளி யிட்டார். பின்னர், “உள்நாட்டு மொத்த உற்பத்தியில் வணிகவியல் மற்றும் நுண் பொருளாதாரத்தின் பிரதிபலிப்பு” குறித்துப் பேசினார்.
“பிரதமரின் ‘ஸ்டார்ட் அப்”
கோழிக்கோடு இண்டியன் இன்ஸ்டி டியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் (ஐ.ஐ.எம்.) இணைப் பேராசிரியர் முனைவர் தீபக் எஸ்.குமார் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, “பிரதமரின் ‘ஸ்டார்ட் அப்” திட்டங்கள், புதுமைகளை உருவாக்குவதல் மற்றும் புதிய வர்த்தக வாய்ப்புகளுக்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து பேசினார்.
இக்கருத்தரங்கில் 13 கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 500 மாணவ, மாணவிகள் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்தனர்.



