டைட்டன் கம்பெனி லிமி டெட்டை சேர்ந்த பிராண்ட் டும், இந்தியாவில் மிக அதிகம் விற்பனையாகும் வாட்ச் பிராண்டா கவும் முன்னிலை வகிக்கும் சொனாடா (Sonata), ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பிரத்யேக கலெக்ஷனாக அன்வெய்ல் 2.0 (Unveil 2.0) கைக்கடிகாரத்தை அறிமுகம் செய்கிறது.
நம்முடைய விழாக்கால உற்சாகத்தையும் அசல் அழகியலையும் புதிய கைக்கடிகாரம் மூலம் உயிர்ப்பித்திருக்கிறது சொனாடா.
சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி போன்ற நகரங்களில் வாடிக்கையாளர்களுக்கு புதிய தயாரிப்புகள் எளிதில் கிடைக்க செய்வதன் மூலம், சொனாடா தனது செயல்பாட்டை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.
சொனாடா அன்வெய்ல் 2.0 கலெக்ஷனின் ஸ்கெலிடல் குவார்ட்ஸ் (skeletal quartz) பார்ப்பவர்களை அசரவைக்கும் வடிவமைப்பு அம்சங்களுடன் சொனாடாவின் தயாரிப்பு வரிசையில் இப்போது இணைந்திருக்கிறது.
இந்த அட்டகாசமான கைக்கடிகாரங்கள் ரூ.2,000 -முதல் 3,000 வரையிலான விலையில் கிடைக்கிறது. ஆண்கள் மற்றும் பெண்களுக் கான 10-க்கும் மேற்பட்ட கைக்கடிகார வகைகளை வழங்குகிறது.
டைட்டன் கம்பெனி லிமிடெட்டின் சொனாடா, எஸ்எஃப் சந்தைப்படுத்துதல் பிரிவு தலைவர் சுபிஷ் சுதாகரன் கூறிய தாவது: அன்வெய்ல் 2.0 போன்ற சிறப்பான தயாரிப்புகளை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருவதன் மூலமாக, இத்தனை ஆண்டுகளில் சொனாடா மிகப்பெரும் பிராண்ட் ஆக உருவெடுத்துள்ளது.
சொனாடா. ஃபேஷன் மீது ஆர்வம் கொண்ட, இளமையான, ட்ரெண்ட்டை பின்பற்ற விரும்புகிற, தங்களது ஆளுமை மீது அதிக கவனம் செலுத்துகிற பெரும் எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளையும் தேவைகளை யும் பூர்த்தி செய்கிறது என்றார்.
‘ஜொலிக்கும் உங்களது ஸ்டைல்’ என்ற தனது புதிய விளம்பரப் படத்தை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. ஃபேஷன், ஸ்போர்ட்டி, ஃபார் மல், ட்ரெஸ் மற்றும் ட்ரெடிஷனல் (fashion, sporty, formal, dress and traditional) போன்ற பிரிவுகளில் ஆண்கள் பெண்கள் என ஒவ்வொருக்கும் ஒவ்வொரு தருணத்திற்கும் மிகப்பொருத்தமான கைக்கடிகாரங்களை வழங்குகிறது சொனாடா.
சொனாடாவின் எஸ்எஃப் SF by Sonata] இளைய தலைமுறைக்கேற்ற வகையில் மலிவான, எங்கும் எளிதில் கிடைக்கிற ஸ்டைலிஷான கைக்கடிகாரங்களைக் கொண்டிருப்பது இந்த பிராண்டின் பல்வேறுபட்ட கலெக்ஷனில் மற்று மொன்றாக விளங்குகிறது.



