கோவை மாநகராட்சிப் பகுதிகளில் வரும் 14-ம் தேதி போகிப் பண்டிகையை முன் னிட்டு, “புகையில்லா போகி” யை கடைபிடிக்க மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
மாநகராட்சிப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், வீடுகளில் சேகரமாகும் குப்பையை மக்கும், மக்காத குப்பை, அபாயகரமான குப்பை மற்றும் இதர குப்பையை பொது இடங்களிலோ, குப்பைத் தொட்டிகளிலோ மற்றும் காலி இடங்களிலோ வீசி எரிய வேண்டாம், தீ பற்ற வைத்து எரித்து விட வேண்டாம்.
சேகரமாகும் குப்பையை தனித்தனியாக பிரித்து தினசரி குப்பையை சேகரிக்க வரும் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களிடம் வழங்கி “புகையில்லா போகி” பண்டிகையாக கடைபிடிக்க வேண்டும்.
மாநகராட்சிப் பகுதியை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.



