fbpx
Homeபிற செய்திகள்துடியலூர் கூட்டுறவு விவசாய ஸ்தாபனத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆய்வு

துடியலூர் கூட்டுறவு விவசாய ஸ்தாபனத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆய்வு

கோவை மாவட்டம், துடியலூரில் உள்ள துடியலூர் கூட்டுறவு விவசாய ஸ்தாபனத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு பிரிவுகளை நேற்று (ஜன.6) ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

துடியலூர் கூட்டுறவு விவசாய ஸ்தாபனம்

துடியலூரில் உள்ள துடியலூர் கூட்டுறவு விவசாய ஸ்தாபனத்தில் பூச்சிக்கொல்லி மருந்து உற் பத்தி பிரிவு, விவசாய உபக ரணப் பிரிவு, பெட்ரோல் பங்க் பிரிவு, விதை பிரிவு, அச்சகப் பிரிவு, பொது சேவை மையம் நுண்ணூட்டச் சத்து உரப் பிரிவு, சில்லறை விற்பனை பிரிவு, செக்கு எண்ணெய் பிரிவு, ஆவின் பிரிவு ஆகிய பிரிவுகள் உள்ளன.

அதில், உரத் தயாரிப்பு பிரிவு, வேப்பம் புண்ணாக்கு உற்பத்தி பிரிவு, நுண் ஊட்டச்சத்து உரப்பிரிவு, விதைப்பிரிவு, பூச்சிக்கொல்லி மருந்து பிரிவு மற்றும் சங்கத்தின் சேவை பிரிவுகளை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் ஆய்வு செய்தார்.

உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விவரங்கள் கேட்டறிந்ததுடன், பொருட்கள் தரமாக உற்பத்தி செய்யப்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் தொடர் முயற்சியின் நடவடிக்கையால் தற்போது, வேளாண்மை துறையின் உற்பத்தி தடை நீங்கி மீண்டும் ஒதுக்கீடு பெற்று துவங்கப்பட்ட கலப்பு உரத் தயாரிப்பு பிரிவின் விற்பனையினை ஆட்சியர் துவக்கி வைத்தார்.

நிகழ்வின்போது, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் எஸ்.பார்த்திபன், மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் இந்துமதி, டியுகாஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கா.சிவகுமார், வேளாண்மை இணை இயக்குநர் முத்துலட்சுமி, மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சபி அகமது, சேவா ஸ்தபன துணைத்தலைவர் ஆர்.செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img