fbpx
Homeபிற செய்திகள்மகப்பேறு இறப்பு விகிதம் குறைகிறது: கோவை ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தகவல்

மகப்பேறு இறப்பு விகிதம் குறைகிறது: கோவை ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தகவல்

கோவை மாவட்டத்தில் மகப்பேறு இறப்பு விகிதம் குறைந்து வருகிறது. மேலும் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் கேட்டுக் கொண்டார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (ஜன.4) பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில், மாவட்ட சுகாதாரப் பேரவை கூட்டம், ஆட்சியர் டாக் டர்.ஜி.எஸ்.சமீரன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:

மக்களின் சுகாதார தரத்தினை மேம்படுத்தும் பொருட்டு, தமிழ்ந £டு சுகாதார சீரமைப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் ஒரு பகுதியான சுகாதார கொள்கை வகுப்பதில் குடிமக்களின் ஈடுபாட்டை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் மாவட்ட அளவில் சுகாதாரப் பேரவை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

கோவை மாவட்டம், 40லட்சத்திற்கு மேல் மக்கள் தொகை கொண்டது. 50 சதவீதம் மக்கள் நகரப்பகுதிகளும், 50 சதவீதம் மக்கள் கிராமப்பகுதிகளிலும் வசித்து வருகின்றனர்.

மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், கிராம ஊராட்சி ஆகிய மூன்றடுக்கு ஊராட்சி அமைப்புகளிலும், 12 வட்டார அளவிலும், சுகாதாரப் பேரவை நடத்தப்பட்டு, சுகாதார மேம்பாடு குறித்து மக்களின் கருத்துக்களும், கோரிக்கைகளும் பெறப்பட்டுள்ளன.

அதனைத்தொடர்ந்து, மாவட்ட அளவிலான சுகாதாரப்பேரவை நடத்தப்படுகிறது. இப்பேரவையில் வைக்கப்படும் கோரிக்கைகள் மாநில அளவிலான சுகாதாரப் பேரவைக்கு அனுப்பி வைக்கப் படவுள்ளன.

மாநில அளவிலான பேரவைக் கூட்டம்

முதல்வரின் தலைமையில் நடைபெறுகிற மாநில அளவிலான பேரவைக் கூட்டத்தில், இக்கோரிக்கைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வாய்ப்புகள் உண்டு.
கோவை மாவட்டத்தில் மகப்பேறு இறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இருந்தபோதிலும் மகப்பேறு இறப்பு விகிதத்தை மேலும் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

மேட்டுப்பாளையம், சூலூர், எஸ்.எஸ்.குளம் ஆகிய பகுதிகளில் வட்டார அளவில் மக்கள் தொகைக்கேற்ப சுகாதார உட்கட் டமைப்பு மேற்கொள்ள கோரிக்கை வரப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் மற்ற துணை சுகாதாரம், ஆரம்ப சுகாதார நிலையம், இணை சுகாதார நிலை யங்களின் உட்கட்டமைப்புகள் மேம்படுத்துவது தொடர்பாகவும், மற்றும் நகரப்பகுதிகளில் மக்கள் தொகை அதிகமாக இருப்பதால் டெங்கு, மலேரியா, சிக்குன் குனியா, வைரல் காய்ச்சல், தொற்றுநோய் உள்ளிட்ட சுகா தாரப் பிரச்சனைகளில் அதிக கவனம் செலுத்தவேண்டிய நிலை உள்ளதால், களப்பணியாளர்களின் தேவையினை கண்டறிந்து களப்பணியாளர்கள் நியமனம் செய்வது தொடர்பாகவும், கோரிக்கைகளை இக்கூட்டத்தில் வழங்கலாம்.

அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள், மக்கள் நலப்பணியாளர்கள் உள்ளிட்ட பணியிடங்கள் காலி யாக உள்ள விவரம், நிரப்பப்பட வேண்டிய பணிகளின் விவரம் பற்றிய கோரிக்கைகள் வரப்பட்டுள்ளன.

கோவை மாவட்டத்தில் கொரோனா பேரிடர் தொற்றுக் காலத்தில் இரண்டு அலைகளையும், தொற்றுப்பரவலை கட்டுப்படுத்தி, இறப்பு சதவீதத்தினை மிக குறைவாக குறைத்து, மக்கள் நலன் பாதுகாக்கப்பட்டுள்ளது.
இதற்கு மக்களின் ஒத்துழைப்பு மிக முக்கிய காரணமாக இருந்தது.
இவ்வாறு மாவட்ட ஆட்சிர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் பேசினார்.

இக்கூட்டத்தில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன், கே.அர்ச்சுணன் (கோவை வடக்கு), ஏ.கே.செல் வராஜ் (மேட்டுப்பாளையம்), வி.பி.கந்தசாமி(சூலூர்) டி.கே.அமுல்கந்தசாமி(வால்பாறை), மாநகராட்சி ஆணையாளர் மு.பிர தாப், கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) டாக்டர் அலர்மேல்மங்கை, மாநில திட்டக்குழு கூடுதல் முழு நேர உறுப்பினர் பேராசிரியர் எம்.விஜயபாஸ்கர், மாநில திட்டக்குழு உறுப்பினர் (சுகாதா ரம்) டாக்டர் ஜி.சிவராமன், தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டம் இணை இயக்குநர் டாக்டர் ரவிக்குமார், முதன்மை திட்ட அலுவலர் மரு.கஜேந்திரன் மூர்த்தி, மண்டலக்குழுத்தலைவர் மீனாலோகு, மாவட்ட ஊராட் சித் தலைவர் சாந்திமதி அசோகன், கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத் துவமனை முதல்வர் மரு.நிர்மலா, இ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.ரவீந்திரன், மாநகராட்சி சுகாதார குழுத்தலைவர் மாரிச் செல்வம், இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) மரு.சந்திரா, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.கு.அருணா, நகராட்சி தலைவ ர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, குடும்பநலத்துறை, சித்தமருத்துவத் துறை, மாவட்ட சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் ஆகிய துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரசு திட்டங்கள் தொடர்பான கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் பார்வையிட்டார்.

படிக்க வேண்டும்

spot_img