fbpx
Homeபிற செய்திகள்‘அறிவு, ஆற்றலை வெளிக் கொணர்வதே கல்வியின் நோக்கம்’

‘அறிவு, ஆற்றலை வெளிக் கொணர்வதே கல்வியின் நோக்கம்’

கோவை கொடிசியா அருகில் உள்ள கீதாஞ்சலி பப்ளிக் பள்ளியின் பத்தாம் ஆண்டு விழா “ஆரா” பள்ளி வளாகத்தில் நடை பெற்றது. தாளாளர் எம்.அழகிரி சாமி தலைமை தாங்கி பேசினார்.

முதல்வர் எஸ். ஜி. கவிதா ஆண்டறிக்கை வாசிக்கையில் வருடம் முழுவதும் பள்ளியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் நடை முறைப்படுத்தப்பட்ட திட் டங்கள் பற்றி குறிப்பிட்டார்.

பாரதிய வித்யா பவன்

சிறப்பு விருந்தினர் பாரதிய வித்யா பவன் கோவை மையத் தலைவர் டாக்டர் கிருஷ்ணராஜ் வாணவராயர் பேசும் போது, எந்த பள்ளிக்கு சிறந்த பெற்றோர் கிடைக் கிறார்களோ அந்த பள்ளி சிறந்த பள்ளியாகத் திகழும்.

ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் அளவற்ற அறிவும் ஆற்றலும் புதைந்து கிடக்கிறது. அதை வெளிக்கொணர்வதே கல்வியின் நோக்கமாகும். குழந்தைகளின் கல்வியில் பெற்றோருக்கும் பெரும் பங்கு உள்ளது.

கல்வியைக் கற்று பெரிய உயரத்திற்கு சென்றாலும், மாணவர்கள் நம் தேசம், நம் மொழி, நம் கலாச்சாரம் என்ற உணர்வுடன் என்றும் இருக்க வேண்டும். கொரொனா தொற்றுக்குப் பின்னும் இந்தியா நல்ல பொருளாதார வளர்ச்சி பெற்றுள்ளது.
குழந்தைகளுக்கு பெரிய எதிர்காலம் இருக்கிறது என்றார். பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

6 முதல் 11-ம் வகுப்பு மாணவர்கள் நிகழ்த்திய கலை நிகழ்ச்சிகள் வானத்தில் விண்மீன்கள் மின்னுவது போல மின்னி அனைவரையும் பரவசப் படுத்தியது. மழலைகள் நடனம் மூலம் மேடையை அலங்கரித்தனர்.

அறங்காவலர் டாக்டர் ஜனனி, தொழிலதிபர் எம் பழனிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img