கோவை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர் கல்வி நிறுவனத்தில் கிறிஸ்துவின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. உணவு மற்றும் ஊட்டச்சத்து துறை பேராசிரியர் முனைவர் எம்.சில்வி யாசுபப்ரியா வரவேற்றார்.
வேந்தர் முனைவர் ச.ப.தியாகராஜன் தலைமை தாங்கி பேசும்போது, அன்பு தான் இன்ப ஊற்று. அன்பு தான் ஜோதி, அன்பு தான் மகாசக்தி. கிறிஸ்துவின் சிறப் புகளையும் எடுத்துரைத்தார்.
ஸ்ரீஅவினாசிலிங்கம் கல்வி நிறுவனத்தின் அறக்கட்டளை துணை நிறுவனர் முனைவர் கௌரிராமகிருஷ்ணன் பேசும்போது, இயேசு அனைவரின் பாவங்களைப் போக்கி புண்ணியவான்களாக மாற்ற நினைத்தார்.
மனிதர்கள் நல்லவர்களாகவும், தன்னம் பிக்கை உடையவர்களாகவும், தைரியம் உடையவர்களாகவும், சேவை செய்யும் மனப்பான்மை கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
சிறப்பு விருந்தினர் கோவை சிஎஸ்ஐ ஆல்சோல்ஸ் தேவாலயத்தின் போதகர் சார்லஸ் சாம்ராஜ் பேசும்போது, மத வழிபாட்டுத்தலங்கள் அனைவருக்கும் பொதுவானவை.
மனித மாண்பை கட்டி வைத்திடும் தீய எண்ணங்கள் நம் மில் இருந்து தூக்கி எறிதல் வேண்டும். மனிதன் எப்படி மனிதனாக வாழ வேண்டும் என்பதை மனிதனாக வாழ்ந்து காட்டியவர் இயேசுநாதர். ஒவ்வொரு நாளும் உயிர் வாழ்வது இறைவனின் அருள் என்பதை உணர வேண்டும்.
மனிதனாக பிறந்து வாழ்ந்து காட்டிய இயேசுபிரான் பிறந்த நாளை உலகமே கொண்டாடுகிறது என்றால் அவரின் மகத்துவம் தனக்குத்தானே வாழ்வது வாழ்வல்ல. எத்தனை துன்பப்பட்டாலும் மற்றவர்களுக்கு பயன்பட்டுக்கொண்டே இருப்பேன் என்று வாழ்ந்தவர் இயேசு பிரான்.
மதம் என்ற வட்டத்தை போட் டுக் கொண்டு மனிதநேயத்தை மறந்து விட்டோம். மதங்கள் என்ற பிம்பங்களை உடைத்து மனித நேயத்தை காக்க வேண்டும். உலகில் அமைதி நிலவ வேண் டும். அன்பை அடிப்படையாகக் கொண்டு அனைவரையும் நேசிக்க வேண்டும் என்றார்.
துணைவேந்தர் முனைவர் பை.பா ரதிஹரிசங்கர், ஆசிரியர்களின் வழிகாட் டுதலின்படி, மாணவிகள் ஒருங்கிணைந்து நடத்திய நாடகத்தினையும் கிறிஸ்துமஸ் விழா சிறப்பினையும் எடுத்துரைத்து பாராட்டினார்.
கிறிஸ்துமஸ் தாத்தா அனைவருக்கும் பரிசுகள் வழங்கி மகிழ்வித்தார்.
ஆங்கிலத்துறைப் பேராசிரியர் முனைவர் எஸ்.கலாமணி நன்றி கூறினார்.



