fbpx
Homeபிற செய்திகள்சீமாட்ஸ் தமிழ் மன்றம் நடத்திய பொன்னியன் செல்வன் உரையாடல்

சீமாட்ஸ் தமிழ் மன்றம் நடத்திய பொன்னியன் செல்வன் உரையாடல்

தமிழ் இலக்கியங்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சவீதா தமிழ் மன்றம், சோழர்களின் வரலாற்றை எடுத்துக் கூறும் சரித்திர நாவலான பொன்னியன் செல்வன் 4-ம் பாகமான மணி மகுடக் காட்சிகள் பற்றிய உரையாடல் நடந்தது.

செவிலியர் கல்லூரியில் இருந்து பேராசிரியர், மாணவ, மாணவர்கள், மருந்தகக் கல்லூரி மாணவர்கள் என சுமார் 120 பேர் பங்கேற்றனர்.

இந்த வாரம் செவிலியர் மற்றும் மருந்தகக் கல்லூரி மாணவர்கள் தங்களது பங்களிப்பை சிறப்பாக ஆற்றினர். நாவலில் உள்ள முக்கியப் பகுதிகளை அரங்கத்தில் வாசித்தனர்.

சீமாட்ஸ் பல்கலைக்கழக வேந்தர் மருத்துவர் ந.மா.வீரைய்யன், சீமாட்ஸ் பொறியியல் கல்லூரி இயக்குநர் முனைவர் ரம்யா தீபக் ஆகியோரின் தமிழ் இலக்கிய ஆர்வமும், வழிகாட்டுதலுமே இத்தகைய சிறப்பான நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறக் காரணமாகும்.

படிக்க வேண்டும்

spot_img