fbpx
Homeபிற செய்திகள்வடபழனி போர்டிஸ் மருத்துவமனையில் பல்துறை சிகிச்சைப் பிரிவு துவக்கம்

வடபழனி போர்டிஸ் மருத்துவமனையில் பல்துறை சிகிச்சைப் பிரிவு துவக்கம்

அனைத்து நோயாளிகளுக்கும் தரமான மருத்துவ சேவையை வழங்கு வதற்கான தொடர் முயற்சியாக, வடபழனியில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் 17 படுக்கைகள் கொண்ட பல்துறை தீவிர சிகிச்சை பிரிவு திறந்து வைக்கப்பட்டது.

இந்த புதிய வசதி மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் 24 மணி நேர பல்துறை நிபுணர்களின் கண்காணிப்பில் செயல்படும். இது தீவிர சிகிச்சை நோயாளிகளுக்கு உயர்-நிலை தீவிர சிகிச்சையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்டுள்ளது.

58 ஐசியூ படுக்கை

ஏற்கனவே மையத்தில் உள்ள 58 ஐசியூ படுக்கை கொண்ட பிரிவுகளுடன் இந்த புதிய ஐசியூ கூடுதல் பிரிவாக இருக்கும். மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மேம்படுத்தப்பட்ட சுகாதார சேவைகளுக்கான வளர்ந்து வரும் தேவை மற்றும் அதற்கு ஆதரவாக அரசின் பல்வேறு முயற் சிகள் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

இதயநோய், எலும்பியல், நரம்பியல், நுரையீரல், இரைப்பைக் குடலியல் மற்றும் கல்லீரல் போன்ற பல்துறை நிபுணர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் எலும்பு மற்றும் மற்ற உறுப்புகள் சம்பந்தப்பட்ட சிக்கலான அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 24 மணி நேரமும் இருப்பர். ஃபோர்டிஸ் மருத்துவமனை தலைவர் வெங்கட் டா ஃபணிதர் நெல்லூரி கூறுகையில், புதிதாக கட்டப்பட்ட ஐசியூ, எங்களின் மேம்பட்ட சிகிச்சை வழங்குவதின் உறுதிப்பாட்டிற்கு ஒரு சான்றாகும்.

மருத்துவத் துறையின் முன்னேற்றம், வழங்கப்படும் நவீன சிகிச்சைகளு க்காக ஐசியூ படுக்கைகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. ‘உயிர் களைக் காப்பாற்றுதல் மற்றும் வளப்படுத்துதல்’ என்ற எங்களின் குறிக்கோளுடன் சேவை செய்வது வடபழனி ஃபோர்டிஸ் மருத்துவமனையின் மீதுள்ள நோயாளிகளின் நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது, இதன் விளைவாக அதிகமான நோயாளிகள் பல்வேறு சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சைகளுக்காக எங்களை அணுகுகிறார்கள்.

இந்த புதிய அதிநவீன ஐசியூ பிரிவு மூலம், அதிக நோயாளிகள் பயனடைவார்கள். எங்கள் சூப்பர் ஸ்பெஷலிஸ்ட் மருத்துவர் குழு அனைத்து நோயாளிகளுக்கும் 24 மணி நேரமும் சிறந்த சிகிச்சை அளிப்பர் என்று உறுதியாக நம்பலாம் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img