fbpx
Homeபிற செய்திகள்எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவன முன்னாள் மாணவர்கள் சந்திப்பு- இணைவேந்தர் பச்சமுத்து வாழ்த்து

எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவன முன்னாள் மாணவர்கள் சந்திப்பு- இணைவேந்தர் பச்சமுத்து வாழ்த்து

எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் வடபழனி வளாக முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்வு 3-வது ஆண்டாக நடைபெற்றது.
பட்டம் பெற்றவர்கள் சர்வதேச அளவில் பல் வேறு பகுதிகளில் உள்ள முன்னணி நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். அதோடு சுய தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

எஸ்ஆர்எம் வடபழனி வளாக பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் கல்லூரி டீன் முனைவர் சி.வி.ஜெயக்குமார் வரவேற்றார். முன்னாள் மாணவர் விவகாரத்துறை உதவி இயக்குநர் முனைவர் ராதா ரவீந்திரன், உள் நாட்டிலிருந்தும் வெளி நாடுகளிலிருந்தும் 112 முன்னாள் மாணவர்கள் தங்கள் குடும்பத்துடன் பங்கேற்று உள்ளதாக கூறினார்.

வாழ்த்துச் செய்தி

எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் இணைவேந்தர் டாக்டர் ரவி பச்ச முத்து அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், விழாவில் குடும்பத்துடன் பங்கேற்றுள்ள முன்னாள் மாணவர்களை வாழ்த்துகிறேன்.

வரும் ஆண்டுகளில் எஸ்ஆர்எம் வட பழனி வளாகத்தின் அர்ப்பணிப்புடன் உள்ள உங்களின் அனுபவங்கள் சாதனைகள் இந்த நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு வழிகாட்டியாக அமையும் .

அவர்கள் முன்னாள் மாணவர்களாக மாறும் போது அவர்களுக்கு உதவியாக அமையும். பல்வேறு துறைகளில் நீங்கள் பெற்ற உங்களின் அறிவு திறமை நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் பலத்திற்கும் உதவும் என்று தெரிவித்துள்ளார்.

எஸ்ஆர்எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரி மற்றும் எஸ்ஆர் எம் கலை அறிவியல் கல்லூரிகளின் தாளாளர் ஹரிணி ரவி அனுப்பியுள்ள
வாழ்த்துச் செய்தியில், எஸ்ஆர்எம் வடபழனி வளாகம் சார்பில் நடத்தப் படும் முன்னாள் மாணவர் சந்திப்பு விழா மகிழ்ச்சி அளிக்கிறது.

இக்கல்வி நிறுவனத்தில் பொறியியல் கல்வியில் நீங்கள் பெற்ற கல்வி அறிவு உங்கள் வாழ்க்கையில் பல்வேறு கட்டங்களில் உயர்வுக்கு வழிவகுக்கும் என்று கூறியுள்ளார்.

எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் தகவல் தொடர்பு இயக்குநர் ஆர்.நந்தகுமார், முன்னாள் மாணவர் இதழ் மற்றும் மலரினை வெளி யிட்டு பேசுகையில், குடும்பத்துடன் பங்கேற்றுள்ள முன்னாள் மாணவர்கள் பட்டம் பெற்ற பிறகு உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் அனுபவங்களை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளீர்கள்.

எஸ்ஆர்எம் வடபழனி வளாகத்தில் பயின்று பல்வேறு நாடுகளில் பணியாற்றி வருவது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.முன்னாள் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முனைவர் வி.பி. ராஜசேகர் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img