fbpx
Homeபிற செய்திகள்மனிதம் காப்போம் அறக்கட்டளை கிறிஸ்துமஸ் விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

மனிதம் காப்போம் அறக்கட்டளை கிறிஸ்துமஸ் விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

கோவை ஒய்எம்சிஏ மைதானத்தில் மனிதம் காப்போம் அறக்கட்டளை சார்பில் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவிற்கு அறக்கட்டளை நிறுவனத் தலைவர் டாக்டர் எஸ்தர் ராணி சாக்ரடீஸ் முன்னிலை வைத்தார். விழாவிற்கு வந்த அனைவரையும் கோவை மூத்த வழக்கறிஞர் சாக்ரடீஸ் வரவேற்று பேசினார்.

கோவை பிஷப் அப்பாசாமி கல்லூரி

விழாவில் கோவை பிஷப் அப்பாசாமி கல்லூரி முதல்வர் டாக்டர் ஜெமிமா, கோவை சிஎஸ்ஐ பள்ளி முதல்வர் குளோரி லதா டேவிட், அமிர்தம், ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் ஏழை எளிய மக்களுக்கு சேலைகள் மற்றும் துணிமணிகள் வழங்கப்பட்டன.

விழாவில் கிறிஸ்துமஸ் விழா பாடல்கள் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

படிக்க வேண்டும்

spot_img