தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் வட்டம், விளாத்திகுளம் வட்டாரம், தலைக்காட்டுபுரம் கிராமத்தில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் 2021-2022-ல் தரிசு நிலத் தொகுப்பினை, மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில்ராஜ், செய்தியாளர்களுடன் சென்று ஆய்வு செய்தார்.
ஆட்சியர் தெரிவித்ததாவது: தலைக்காட்டுபுரம் தரிசு நிலத் தொகுப்பில் 32 ஏக்கர் பரப்பளவில் இருந்த தரிசு நிலத்தில் இருந்த கருவேல மரங்கள் அகற்றப்பட்டு சாகுபடிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
16 விவசாயிகள் கொண்ட குழு
இத்தொகுப்பில் 16 விவசாயிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு இரண்டு ஆழ்துறை கிணறு ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது ஓர் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. சூரிய ஒளி சக்தியில் இயங்கும் மின் மோட்டார் அமைக்கப்பட்டு நுண்ணீர்பாசனம் மூலம் பழமரக்கன்றுகள் பயிரிடப்படும்.
தற்சமயம் 7 ஏக்கர் பரப்பளவில் சூரியகாந்தி COS பயிரும், 24 ஏக்கரில் உளுந்து MOU5 பயிரிடப்பட்டுள்ளது. தொகுப்பில் அமைக்கப்பட்ட இரண்டு பண்ணைக்குட்டைகள், தூர் வாரப்பட்ட ஊரணி ஆகியவை பார்வையிடப்பட்டன.
தலைக்காட்டுபுரம் ஊராட்சியில் தலைக்காட்டுபுரம் ஊராட்சி அலுவலகம், குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, NREGS அங்கன்வாடி கட்டிட பணிகள் பழைய பள்ளி கட்டிடம், பொது விநியோக கட்டிடம் ஆகியவற்றில் நடைபெறும் பணிகள் பார்வையிடப்பட்டன. பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர்.
வேளாண்மை இணை இயக்குநர் எஸ்.ஐ.முகைதீன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவ) ஆ.நாச்சியார் அம்மாள், செயற்பொறியாளர் பா.கிளாட்வின் இஸ்ரேல், வேளாண்மை உதவி இயக்குநர் கீதா, தோட்டக்கலை உதவி இயக்குநர் சிவக்குமார், உதவி செயற்பொறியாளர் சங்கரநாராயணன், எட்டையபுரம் வட் டாட்சியர் கிருஷ்ணகுமாரி, விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேல் முத்துகுமார் வேளாண்மை அலுவலர் நவநீதன், உதவி பொறியாளர் ரமா, பஞ்சாயத்து தலைவர் பச்சைபெருமாள், வேளாண்மை உதவி அலுவலர் சுதாகர், அருள்பிரகாஷ், சுரேஷ், கௌதமி, மணிகண்டன் ஆகியோர் உடன் இருந்தனர்.



