கோவை காருண்யா தொழில்நுட்பம் மற்றும் அறியவியல் நிகர் நிலைப் பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் திட்டத்தின் நிதியுதவியுடன் ஒருங்கிணைந்த நீர்வள மேலாண்மையின் வாய்ப்புகள் மற்றும் சவால்கள் பற்றிய இரு நாள் சர்வதேச அளவிலான மாநாடு நடந்தது.
மாநாட்டில் நீரியல், புவியியல் தொழில்நுட்பங்கள், நீர்வள மேலாண் மையில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு, வேளாண்மை, நீரின் தரம், நீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பங்கள், நன்செய் சூழலியல், நீர் பாதுகாப்பு மற்றும் நிலத்தடி நீராதாரத்தை அதிகரித்தல், நீர்வளங்களில் கால நிலை மாற்றத்தினால் ஏற்படும் தாக்கங்கள், நீர் பொருளாதாரம், நிர்வாகம், கொள்கைகள் மற்றும் திறன் மேம்பாடு ஆகிய கருப்பொருள் தலைப்புகளின் கீழ், உரைகள் மற்றும் விவாதங்கள் நடந்தன.
கருத்தரங்கின் தொடக்கத்தில் 4 முக்கிய விரிவுரைகளும், 6 கருத்துரைகளும் இடம்பெற்றன. சுமார் 120 ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
காருண்யா நிகர்நிலைப் பல்கலை. வேந்தர் பால்தினகரனின் ஆலோசனையின்படி கருத்தரங்கின் தொடக்கத்தில், காருண்யா நிகர் நிலை பல்கலைக்கழகம் மற்றும் மத்திய நீர்வள மேம்பாடு மற்றும் மேலாண்மை மையம், கேரள ஆகியவற்றிற்கு இடையே நீர்வள மேம்பாடு மற்றும் மேலாண்மை சார்ந்த கூட்டு ஆராய்ச்சித் திட்டங்கள், ஆலோசனைகள், கல்வி சார் இணைப்பு, பேராசிரியர்கள், மாணவர் கள் பரிமாற்றம் ஆகியவற்றிற்கு வழிவகை செய்யும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாறிக் கொள்ளப்பட்டது.
இதற்கான ஒப்பந்ததத்தை காருண்யா நிகர்நிலை பல்கலை இணை துணைவேந்தர் இ.ஜே.ஜேம்ஸ், பதிவாளர் எலைஜா பிளசிங் முன்னிலையில், மத்திய நீர்வள மேம்பாடு மற்றும் மேலாண்மை மையத்தின் இயக்குநர் மனோஜ் குமாரிடம் பரிமாறிக் கொண்டனர்.
சென்னை அண்ணா பல்கலைக் கழக பேராசிரியர் எல்.இளங்கோ சிறப்புரையாற்றினார். கேரளா மீன்வளம் மற்றும் கடல்சார் ஆய்வு பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் கிரிடூ கோபிநாத், சஜிகுமார் ஓய்வு பெற்ற பேராசிரியர் தலைமை நிர்வாகி அதிகாரி மற்றும் நீர்வள மேலாண்மை ஆலோசகர், முரளி கிருஷ்ணா அய்யங்கி, ஓய்வு பெற்ற பேராசிரியர் மற்றும் இயக்குநர் ஜவகர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகம், ஹைதராபாத் ஆகியோர் கருத்தரங்கில் முக்கிய உரைகளை நிகழ்த்தினர்.



