fbpx
Homeபிற செய்திகள்“மாற்றுத்திறனாளி பெண்களின் உரிமைகள்” ஜே.எஸ்.எஸ்.பார்மசி கல்லூரியில் கருத்தரங்கம்

“மாற்றுத்திறனாளி பெண்களின் உரிமைகள்” ஜே.எஸ்.எஸ்.பார்மசி கல்லூரியில் கருத்தரங்கம்

புது தில்லி தேசிய மகளிர் ஆணையம் நிதியுதவியுடன் ஜே.எஸ்.எஸ். ஆராய்ச்சி மற்றும் உயர் கல்வி குழுமம் இணைத்து, உதகையில் ஜே.எஸ்.எஸ். பார்மசி கல்லூரியில் மருந்து வேதியியல் துறையின் ஏற்பாட்டில் “மாற்றுத்திறனாளி பெண்களின் உரிமைகள்” என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் நடத்தியது.

இணைப் பேராசிரியை டாக்டர் கவுரம்மா வரவேற்றார்.
துறைத் தலைவர் முனைவர் ஆர்.காளிராஜன், மாற்றுத்திறனாளி பெண்களின் உரிமைகளின் முக்கி யத்துவத்தை எடுத்துரைத்து, திட் டத்தைப் பற்றி விளக்கினார்.
கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.பி. தனபால் தலைமை தாங்கி பேசினார். வேலூர் தொழில்நுட்ப நிறுவன பேரிடர் தணிப்பு மற்றும் மேலாண்மை மையத்தின் இயக்குநரும் பேராசிரியருமான முனைவர் எஸ்.எஸ். சந்திரசேகரன் பேசும்போது, இதுபோன்ற நிகழ்ச்சி கள் மாற்றுதிறனாளிகளுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்பட மிக அவசியம் என்றார்.

கோவை பாரதியார் பல்கலைக்கழ கத்தின் மகளிர் ஆய்வுத் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் கமலாவேணி, மாற்றுத்திறனாளி பெண்களிடையே பாலியல் கல்வி மற்றும் போஸ்கோ சட்டத்தின் முக்கி யத்துவம் குறித்து விளக்கினார்.

முன்னாள். பெண்கள் பாதுகாப்பு அலுவலரும் வழக்கறிஞருமான மரகதவல்லி மாற்றுத்திறனாளி பெண்களுக்குக் கிடைக்கும் பல்வேறு வகையான சட்ட உரிமைகள் மற்றும் அரசின் திட்டங்கள் மற்றும் அதன் பலன்கள் குறித்தும் விளக்கினார்.

உதகை அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியை மற்றும் தலைவர் டாக்டர் பி.கனகாம்பாள் மாற்றுத்திறனாளி பெண்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
முன்னாள் சிறப்பு அரசு வழக்கறிஞர் மாலினி பிரபாகரன் பேசுகையில் மாற்றுத்திறனாளி களுக்கு இலவச சட்டஉதவிகள் தேவைப்படும்போது தன்னை அணு குமாறு வேண்டுகோள் விடுத்தார்


மருந்து வேதியியல் துறையின் விரிவுரையாளரும், அமைப்பு செயலாளருமான டாக்டர் கோமதி சுவாமிநாதன், சமூகத்தில் சாதித்த மாற்றுத்திறனாளிகள் குறித்தும், மருந்துபகுப்பாய்வுத் துறை இணைப்பேராசிரியர் முனைவர் எம்.ஆர்.ஜெயப்பிரகாஷ் மாற்றுதினா ளிகளின் மருத்துவ உரிமைகள் பற்றி யும் பேசினர்.

மருந்தியல் வேதியியல் துறை இணைப் பேராசிரியர் டாக்டர் எஸ்.ஜூபி நன்றி கூறினார்.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img