fbpx
Homeபிற செய்திகள்ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் தேசிய உடல் உறுப்பு தான நாள் அனுசரிப்பு

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் தேசிய உடல் உறுப்பு தான நாள் அனுசரிப்பு

உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தான் இறந்தாலும் தன் உடல் உறுப்புகளால் பலரை வாழ வைக்க உடல் உறுப்பு தானம் செய்தவர்களையும் அவர்கள் குடும்பத்தினரையும் கௌரவப்படுத்த, கோவை சித்தாபுதூரில் அமைந்துள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில், தேசிய உடல் உறுப்பு தான நாள் அனுசரிக்கப்பட்டது.

தானமாக கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை பெற்று ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் நன்றி களை தெரிவித்தனர்.

கொடையாளர்களின் குடும்பத்தினர் மருத்துவமனையின் நிர்வாகத்தினரை சந்தித்து அவர்களின் வாழ்த்துகளை பெற்றனர்.

உடல் உறுப்பு தானம் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு நம் மாநிலத்தில் எப்படி பட்ட தேவை உள்ளது, அதற்காக எத்தனை உடல் நலம் பாதிக்கப்பட்டோர் காத்துக்கிடக்கின்றனர் என்பதை பற்றி இந்நிகழ்வில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்து வமனை எடுத்து விளக்கியது.

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான செலவைக் குறைப்பதற்காகத் தொடர்ந்து முயற்சிகளை எடுக்கும். அதன் மூலம் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள நோயா ளிகளுக்கு பயன்பெறும் வண்ணம் செயல்படும் என தெரிவிக்கப்பட்டது.

எஸ்.என்.ஆர்.அறக்கட்டளை

எஸ்.என்.ஆர்.அறக்கட்டளை சி.இ.ஓ. ராம்குமார், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் ஆனந்த் பரதன், டாக்டர் ஜெயபால், மருத்து வமனை ஆர்.எம்.ஓ. அழகப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img