fbpx
Homeபிற செய்திகள்சோழர்களின் பெருமைகளை கொண்டாடும் தனிஷ்க்

சோழர்களின் பெருமைகளை கொண்டாடும் தனிஷ்க்

கடல் கடந்து வெற்றிக்கொடி நாட்டிய மாபெரும் சோழப் பேரரசைக் கொண்டாடும் வகையிலும், அதன் கவர்ந்திழுக்கும் தெய்வீக மகிமையை வெளிப்படுத்தும் நோக்கிலும், டாடாவின் ஓர் அங்கமான இந்தியாவின் மாபெரும் ஜூவல்லரி விற்பனை பிராண்டான தனிஷ்க் ‘த சோழா’ (The Chozha) என்னும் பிரத்யேக நகைத்தொகுப்பை அறிமுகப்படுத்துகிறது.

மாபெரும் சோழ சாம்ராஜ்யத்தின் 3 முக்கிய அம்சங்களாக விளங்கியவற்றின் மீது உண்டான ஈர்ப்பு மற்றும் பிரம் மாண்டத்தினால் கவரப்பட்டு ஒரு கம்பீர மான நகைத்தொகுப்பாக ‘த சோழா’ வடிவமைக்கப்பட்டுள்ளது.

கோபுரங்களின் நுணுக்கமான சிறு சிறு அழகியல் அம்சங்கள் மற்றும் இன்னொரு பக்கம் தமிழ் மொழியில் அமைந்த கல்வெட்டுகளைத் தழுவி மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட சோழ சாம்ராஜ்யத்தின் கம்பீரத்தை வெளிப் படுத்தும் நகைத்தொகுப்பாக தனிஷ்க்கின் ‘த சோழா’அமைந்துள்ளது.

தனிஷ்க்கின் “சோழா” கலெக்ஷன் பொற்காலத்தின் தமிழ் எழுத்துருக்கள், மெய் மறக்கச் செய்யும் கட்டடக்கலையைத் தழுவிய என்க்ரேவிங்குகள், நாணயத்தின் நிழல் பிம்பங்கள் என்று பெருமையாக உணர வைக்கும்.

இதனை அணிபவரை உடனடியாக பொற்காலத்திற்கு அழைத்துச் செல்லும் அட்டகாசமான நகைத்தொகுப்பாகும். இன்றைய புதுமைப் பெண்களுக்கு, ‘த சோழா’ நகைத்தொகுப்பிலுள்ள ஒவ்வொரு நகையும் ஒரு பிரத்தியேகமான கதையைக் கொண்டுள்ளது.

பிரம்மாண்டமான சோழ வரலாற்றின் ஒரு பகுதியைக் கொண்டுள்ளது. நகைத்தொகுப்பின் வெளியீட்டு விழாவில், MH கேட்டகிரி, மார்க்கெட்டிங் மற்றும் ரீடெய்ல், தனிஷ்க், டைடன் கம்பெனியின் அருண் நாராயணன் பேசியதாவது:
நம்முடைய பாரம்பரியமிக்க வரலாறு மற்றும் தொன்மையான கலாச்சாரம் இவை இரண்டும் மக்களோடு மக்களாக நம்முடன் ஒன்றிணைந்து இருக்கிறது.

இதுவே நமக்கான அடையாளத்தையும், பெருமையையும் கொடுக்கிறது. அதனால் தான் வரலாற்றில் உண்மையிலேயே பொற்காலமாக போற்றப்படும் காலக் கட்டத்தின் கட்டிடக்கலை, கலை மற்றும் கைவினைத்திறன் ஆகியவற்றினால் ஈர்க்கப்பட்டு, அதன் வெளிப்பாடாக பிரத்யேக நகைத் தொகுப்பை பண்டிகைக் காலத்தில் அர்ப்பணிப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறோம்.

தனிஷ்க் கின் ‘சோழா’, நகைத்தொகுப்பு, பாரம்பரியத்தின் கதைகள், சின்னங்கள் மற்றும் சாதனை மனிதர்களை உயிர்ப்பிக்கும் மிக நேர்த்தியான மற்றும் அசல் நகைகளின் தொகுப்பாக அறிமுகப்படுத்தப்பட்டுள் ளது என்றார்.

படிக்க வேண்டும்

spot_img