கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.13க்குட்பட்ட ஸ்ரீனிவாசா நகர் பகுதியில் உள்ள அம்ரூத் பூங்காவில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பூங்காவில் உள்ள பழுதடைந்த குடிநீர் குழாய்கள் மற்றும் விளக்குகளை மாற்றியமைக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
உடன் மாமன்ற உறுப்பினர்கள் சுமதி, ராமமூர்த்தி, உதவி ஆணையாளர் மோகனசுந்தரி, உதவி செயற்பொறியாளர் செந்தில்பாஸ்கர், சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் ஜெகநாதன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.



