தமிழகத்தில் தற்கொலைக்கான காரணம் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு புகார் அளிக்கப் படுகிறது என்பதை, தற்கொலையால் பாதிக்கப்பட்டவர்களை ஆதரிப்பதற்கான ஒரு மனிதாபிமான திட்டமான “தி ரோட்டரி புரா ஜெக்ட் ஆஃப் ரெயின்போ” கண்டறிந்துள்ளது.
பல நிகழ்வுகளில் ஆன்லைன் விளையாட்டுகள் தான் தற்கொலைக் கான காரணம் என்று தவறாக அறிக்கைகள் அளிக்கப்பட்டுள்ளன. தற்கொலை செய்து கொண்ட வர்களின் குடும்பங்களுக்கு ஆதரவாக செயல்படும் நோக்கத்தோடு ஒரு முயற்சியாக ரோட்டரி இன்டர்நேஷனல் டிஸ்டிரிக்ட் 3232 மற்றும் 3021, தொடங்கப்பட்டது தான் “தி ரோட்டரி ரெயின்போ புராஜெக்ட்” திட்டம்.
இத்திட் டத்தினர் தற்கொலை செய்து கொண் டவர்களின் குடும்பத்தினருடன் நெருக்கமாக செயல்படுவர்.
கோவை ஆயுதப்படையில் காவல ராக பணிபுரிந்தவர் காளிமுத்து. இவர் கடந்த ஜூலை மாதம் தற்கொலை செய்து கொண்டார். ஊடக அறிக்கைகளின்படி, ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் அடிமையாகி பணத்தை இழந்ததே இதற்கு காரணம் என்று சுட்டிக்காட்டப்பட்டது.
ரோட்டரி ரெயின்போ திட்டத் தினர் காளிமுத்துவின் மனைவி தில்லைக்கு கவுன்சிலிங் அளித்து, அவரது குழந்தைகளின் கல்விக்கும் உதவி வருகிறது. ஆழ்மனதில் அழுத்திய சுமை தான் அவரை இத்தற்கொலைக்கு தூண்டியது. ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால் அல்ல என்று அக்குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை மணலியில் குடும்பத் துடன் வசித்து வந்தவர் பெயிண்டிங் கான்ட்ராக்டர் நாகராஜன். இவர் ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடி மையாகி தற்கொலை செய்து கொண்டதாக ஊடகச் செய்திகள் தெரிவித்தன.
ரெயின்போ புராஜெக்ட் திட்டத்தினர் இக்குடும்பத்தினரை ஆதரித்து, அவர்களுக்கு தார்மீக மற்றும் நிதியுதவி அளித்து வழிகாட்டி வருகின்றனர். உண்மையில், கடன் வலையில் சிக்கி மீளமுடியாத துயரத் தால் தான் தற்கொலை முடிவு எடுத்துக் கொண்டார். ஆன்லைன் சூதாட்டத்துக்கு எந்த தொடர்பும் இல்லை என அக்குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
2021-ம் ஆண்டில் நாட்டில் மொத்தம் 1,64,033 தற்கொலைகள் பதிவாகியுள்ளன. இது 2020 உடன் ஒப்பிடும்போது 7.2% அதிகரித் துள்ளது என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) அறிக்கை தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கை, தற்கொலைக்கான முக்கிய காரணங்களையும் பட்டியலிட் டுள்ளது.
ன்சிஆர்பியின் கூற்றுப்படி, பெரும்பாலான பிரச்சனைகள் ஒருவரின் வேலை அல்லது தொழில், தனிமை, துஷ்பிரயோகம், வன்முறை, குடும்பங்களில் மோதல், மனநோய், குடிப்பழக்கம், நிதி இழப்பு மற்றும் நாள்பட்ட வலி ஆகியவற்றுடன் தொடர்புடையவை.
“வாழ்க்கையின் மிகப்பெரிய பரிசு வாழ்க்கையே. தற்கொலை விகிதங்கள் அதிகரிப்பதைத் தடுப்பதற்கான மிக முக்கியமான வழிகளில் ஒன்று, இந்த இறப்புகளுக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிந்து அவற்றைத் தடுப்பதற்கான நிலையான வழியைக் கண்டறிவதாகும்.
எல்லா தற்கொலைகளுக்கும் ஒரு தவறான முத்திரையைக் கொடுப்பது மனித குலத்துக்கும், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கும் பெரும் கேடு விளைவிக்கும்” என்றார் ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை இன்ஃபோசிட்டியின் பிபி ஸ்ரீதர்.



