fbpx
Homeபிற செய்திகள்‘சிந்தித்து செயல்பட்டால் கடின வாழ்க்கையும் எளிமையாகும்’ ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை கல்லூரியில் என்.சி.சி. துணை இயக்குநர்...

‘சிந்தித்து செயல்பட்டால் கடின வாழ்க்கையும் எளிமையாகும்’ ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை கல்லூரியில் என்.சி.சி. துணை இயக்குநர் பேச்சு

எதையும் சிந்தித்து செயல்படுத்தினால், கடின மான வாழ்க்கையை எளி மையானதாக மாற்ற முடியும் என்று என்.சி.சி. துணை இயக்குநர் அதுல்குமார் ரஸ்டோகி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

கோவை நவ இந்தியா-ஆவாரம்பாளையம் சாலையில் உள்ள, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூ ரியில், கோயம்புத் தூர் குரூப் தேசிய மாணவர் படை (என்.சி.சி.) மாண வர்களுக்கான கலந்துரை யாடல் நிகழ்ச்சி நேற்று (2.8.2022) நடை பெற்றது.

எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் ஆர். சுந்தர் தலைமை வகித்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல் லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் வரவேற்றார்.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான், நிக் கோபார் தீவுகளின் தேசிய மாணவர் படை இயக் குநரக துணை இயக்குநர் ஜெனரல் கமாண்டர் அது ல்குமார் ரஸ்டோகி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:

கோவையில் பணியாற் றிய பசுமையான நாட் கள் நினைவில் வந்து செல்கிறது. நல்ல புத் தகங்கள் வாசிப்பது நல்ல அனுபவங்களைப் பெற் றுத்தரும். வாசிப்பை நீங்கள் நேசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

சமீ பத்தில் நான் வாசித்த சாலையில்லா பயணம் என்ற ஆங்கில நூலின், முதல்வரி வாழ்க்கை மிக வும் கடினமானது என தொடங்கியது. ஆம். உண்மைதான். வாழ்வில் அனைத்தும் கடினம் தான். அதை எளிமையாக அமைத்துக் கொள்வது நம் கையில் தான் உள்ளது. தடைகளைத் தாண்டிதான் வெல்ல வேண்டியுள்ளது.

எனக்கு ஆங்கில ஃபார் முலா ஒன்று நினை வுக்கு வருகிறது. அது விழிப்புணர்வுடன் செயல் படுதல், சமநிலையைக் கையாளுதல், எதையும் தைரியமாக எதிர்கொள்ளு தல், ஒழுக்கத்தைக் கடைபிடித்தல் மிகவும் அவசியம். இவை எல்லா வற்றிற்கும் மேலாக சிந்திப்பது அவசியம்.

எதையும் சிந்தித்து செயல் படுத்தினால், கடின மான வாழ்க்கையை எளி மையானதாகமாற்ற முடியும் என்றார்.அதைத் தொடர்ந்து கலந்துரை யாடல் நிகழ்ச்சி யில் மாணவர்களின் கேள் விகளுக்கு கமாண்டர் அதுல்குமார் ரஸ்டோகி பதிலளித்தார்.

அகில இந்திய துப்பாக்கிசுடுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற, ஸ்ரீராமகிருஷ்ணா கலை கல்லூரியின் 6 தமிழ்நாடு மெடிக்கல் கம்பெனி தேசிய மாண வர் படை மாணவர் டி.நதீஷ் கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

தேசிய மாணவர் படை அலுவலர்களுக்கு பாராட் டுச் சான்றிதழ்கள் வழங்கப் பட்டன.கோவை குரூப் கமாண்டர் கர்னல் எல்.சி. எஸ். நாயுடு உள்ளிட் டோர் பங்கேற்றனர். தேசிய மாணவர் படை அலுவலர் லெப்டினன்ட் ஈ.விவேக் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img