கடந்த 30ம் தேதி கோவை கற்பகம் நிகர் நிலை பல்கலைக்கழகத்தில் மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி நடைபெற்றது.
இதில் 300க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் மினி சப் ஜூனியர், சப் ஜூனியர், ஜூனியர், சீனியர் ஆகிய பிரிவுகளின் கீழ் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் பள்ளி மாணவர் கள் மாணவிகள் கலந்து கொண்டனர்.
இப் போட்டியினை கற்பகம் பல்கலைக்கழக துணை வேந்தர் வெங்கடாஜலபதி துவக்கி வைத்தார், பதிவாளர் பழனி சுவாமி முன்னிலை வகித்தார். கோவை மாவட்ட சிலம்பு விளையாட்டு சங்கத்தின் த¬ லவர் செல்வகுமார் தலைமை வகித்தார். பல்கலைக்கழக உடற்கல்வித்துறை இயக்குனர் சுதாகர் வரவேற்புரை நல்கினார்.
இந்த சிலம்ப போட்டி கம்பு வீச்சு, அலங்கார வீச்சு, வேல் கம்பு வீச்சு, ஒற்றை வாள் வீச்சு, ஒற்றை சுருள்வாள் வீச்சு, குத்துவரிசை, இரட்டைக் கம்பு வீச்சு, இரட்டைவாள் வீச்சு, இரட்டை சுருள்வாள் வீச்சு, மான் கொம்பு வீச்சு, ஆயுத ஜோடி, குழு ஆயுத வீச்சு, கம்பு சண்டை ஆகிய 13 பிரிவின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டது.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. போட்டிகளில் முதலிடம் பிடித்த மாணவர்கள் மாநில அள விலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
சீனியர் பிரிவில் கௌதம் கிருஷ்ணன், சசிகுமார், முருகா னந்தம், சௌந்தர்ராஜ், அருண் பாண்டியன், சர்வேஷ், தசாதரன், சிவா, தமிழரசன், சந்திரமுகிலன், பெரியசாமி, திகம்பரன், மிருதலா, நித்யா ,மைதிலி, பிரதீபா, ஜெனித், தர்ஷினி, பிருந்தா மௌலிகா, சுகிசிமா, ஹிமாலினி, ஜூனியர் பிரிவில் ஜெயசிம்மன், திவாகர், கிரிஸ் ரோஷன், ஜீவன், சச்சின், ஹேமந்த், அபிமன்யு , அருள், ஜெகதீஸ்வரர், நகுல், சௌந்தர்ராஜ்,குமார், சஞ்சய், ஸ்ரீ ஜெய விஜயானந்த், நவீன் ,பரத்,மகளிர் ஜூனியர் பிரிவில் சிவானி ,மகரதி, ஆசிரிதா, பிரதக்ஷனா ஹர்ஷினி, ஜெய் சக்தி, பிரதீபா ஸ்ரீ, விஸ்மயா, ரோஷினி, வைஷ்ணவி, ரம்யா ,ரேஷ்மா, மித்ரா, சப் ஜூனியர் பிரிவில் தீக்ஷித் ,கிரித்திக், கிஷன் ,கார்த்தி, தருண் ,சர்வேஷ் , ஆதித்யா, விஜய் நிகிலேஷ் ,ராகுல் துரை ,ஆனந்த் ரூபேஷ்குமார், அபிஜித், நவநீத், விவின் ,ஸ்ரீ வர்ஷன், ஆதர்ஷ் ,நவநீத கண்ணன் ,சரண், அஸ்வின், மித்ரேஸ்ராம், தர்ஷன், ஸ்ரீ வர்ஷன், பிரணவேஷ், பவித்ரா, ஹர்ஷினி, கற்பக அக்ஷயா பிரதன்யா ஸ்ரீ, அக்ஷதா, ஆசிரிதா, நேத்ரா ஸ்ரீ , ராம சகத்தியா, இலக்கியா, இனியா, ஹர்ஷவர்த்தினி, ரியா ஸ்ரீ, லியா கமலி, திவ்யா ஸ்ரீ, அஸ்வதா, மோகன், ஸ்ரீ ஹரி, ஸ்மிதா, உதயா ஸ்ரீ விவேகா, தர்ஷினி, மினி சப் ஜூனியர் பிரிவில் சச்சின் ஆலிவர், சஞ்சித், ஹரி சுந்தர், தர்ஷன், பெவின், அலெக்சாண்டர், வைபவ், கேசவ் ,அனீஸ், ருத்ரேஷ், பிரன வேஷ், மிதிலேஷ்,ரோகன், அரவிந்த், நெகா ஸ்ரீ, கவிநயாஸ்ரீ, தேன்மலர், சங்கவி, பிரகதி, உதயந்திரன், தின்ஷா, சிரக்ஷா, தனுஷ்கா, ரிதனா, சாய் ஹரிணி, லியானா தென்றல், சௌமித்ரா ஆகியோர் மாநில போட்டிக்கு பல்வேறு பிரிவின் கீழ் தங்கப்பதக்கம் வென்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
வெற்றி பெற்ற வீரர்களுக்கு கற்பகம் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை இயக்குனர் சுதாகர் மற்றும் கோவை மாவட்ட சிலம்ப விளையாட்டு கழகத்தின் தலைவர் செல்வகுமார் பரிசுகள் வழங்கினார். சீனியர் பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கற்பகம் பல்கலைக்கழகம் பெற்றது.
ஜூனியர் பிரிவில் சர்வதேச சிலம்பாட்ட ஆட்ட சாலை பெற்றது. சப் ஜூனியர் பிரிவில் சிலம்பாலயா அணியினர் 21 தங்கம், 12வெள்ளி, 12 வெண்கலம் என மொத்தம் 53 பதக்கங்கள் வென்றனர்.
மினி சப் ஜூனியர் பிரிவில் இளந்தளிர் அணியும் சாம்பியன் பட்டத்தை பெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களை பெற்றோர் மற்றும் பயிற்சியாளர்கள் வாழ்த்தினர்.



