fbpx
Homeபிற செய்திகள்சிறந்த கார் கடன் திட்டங்கள் வழங்க இந்தியன் வங்கியுடன் டாடா மோட்டார்ஸ் கூட்டு

சிறந்த கார் கடன் திட்டங்கள் வழங்க இந்தியன் வங்கியுடன் டாடா மோட்டார்ஸ் கூட்டு

பண்டிகைக் காலம் நெருங்கி வருவதையடுத்து, இந்தியாவின் முன்னணி வாகன பிராண்டான டாடா மோட்டார்ஸ், அதன் பயணிகள் வாகன வாடிக்கையாளர்களுக்கு எளிதான நிதியுதவியை சாத்தியமாக்க இந்தியன் வங்கியுடன் கூட்டாண்மையை மேற்கொண்டுள்ளது.

இச்செயல்திட்டக் கூட்டாண்மையானது நாடு முழுவதும் உள்ள இந்தியன் வங்கியின் 5700+ கிளைகளில் இருந்து தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் கவர்ச்சிகரமான கார் கடன்களை வழங்கு வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
எளிதான நிதியுதவியானது 7.80%என்னும் கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களில் துவங்கும்.

இந்தத் திட்டம் சாலை நிதியில் 90% வரை நிதியுதவியை வழங்கும், 7 ஆண்டுகள் வரை திருப்பிச் செலுத்தும் காலகட்டத்தையும் தரும்.

கூடுதல் கட்டணங்கள் ஏதுமின்றி வாடிக்கை யாளர்கள் முன்கூட்டியே கடனை முடிக்கலாம் அல்லது பகுதியளவு பணம் செலுத்தலாம். டாடா மோட்டார்ஸ் வாடிக்கையாளர்கள் நாடு முழுவதும் உள்ள டாடா மோட்டார்ஸ் டீலர்கள் மூலமாகவும் நிதி விருப்பங்களை பதிவு செய்யலாம்.

நெட்வொர்க் மேலாண்மை மற்றும் EV விற்பனை, டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள் லிமிடெட், மூத்த பொது மேலாளர் ரமேஷ் துரைராஜன் கூறிய தாவது:பயணிகள் வாகன ங்களை தனிநபர்கள் மற்றும் குடும்பங்களுக்கு அணுகக்கூடியதாக மாற்ற இந்தியன் வங்கியுடன் கூட்டு சேர்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

எங்கள் கூட்டாண்மை வாடிக்கையாளர்களுக்கு சீரான அனுபவத்தை வழங்குவதையும், அதன் மூலம் வரவிருக்கும் பண்டிகை காலத்தின் உற்ச £கத்தை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார்.

இந்தியன் வங்கியின் செயல் இயக்குநர் இம்ரான் அமின் சித்திக், இந்தியாவின்.
முன்னணி பயணிகள் வாகன உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ் பேசஞ்சர் வெஹி கிள்ஸ் லிமிடெட் உடனான எங்கள் கூட்டாண் மையால், அவர்களின் வாடிக்¬ கயாளர்களுக்கு கவ ர்ச்சிகரமான மற்றும் எளிதான கார் நிதி விருப்பங்களை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம்.

இந்தியன் வங்கியானது நாடு முழுவதும் பரந்த அளவில் இயங்கி வருகிறது. டாடா மோட்டார்ஸ் வாடிக்கையாளர்களுக்கு கார் வைத்திருக்கும் அவர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்வதற்காக எங்கள் டிஜிட்டல்-கடன் வழங்கும் செயல்முறை உட்பட வகையினத்தில் சிறந்த சேவைகளை வழங்குவதில் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img