ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் அதன் ஓய்வூதிய வணிகப் பிரிவில் 2021 நிதியாண்டில் ரூ. 2,292 கோடியிலிருந்து, 2022 நிதியாண்டில் ரூ. 2,956 கோடிக்கு 29% வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. நிலையான வருமான பத்திரங்கள் மீதான தொடர்ச்சியான குறைந்த வட்டி விகிதங்கள், அதிகரித்து வரும் பணவீக்கம், நிலையற்ற சந்தை வருமானம் மற்றும் கோவிட்-19 காரணமாக ஒட்டுமொத்த பொருளாதார வீழ்ச்சி ஆகியவற்றால் ஓய்வுபெறும் பிரிவு ஆரோக்கியமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் ஓய்வூதியத்தில் தங்கள் பணத்தை எவ்வாறு நிலைநிறுத்துவது என்று சிந்திக்க வைத்துள்ளது.
எனவே தனிநபர்கள் ஓய்வுக்குப் பின் வழக்கமான வருமானத்தைத் தேடுகிறார்கள் மற்றும் வருடாந்திர தயாரிப்புகள் அவர்களுடைய பொற்காலத்தைப் பாதுகாக்க அவர்களுக்குக் கிடைக்கும் சிறந்த கருவிகளில் ஒன்றாகும்.
வாடிக்கையாளர்களின், ஓய்வூதியத்தின் மீதான நிதிப் பாதுகாப்பின் தேவையை நிவர்த்தி செய்ய, இந்த நிறுவனம், ஐசிஐசிஐ ப்ரு கேரன்டீட் பென்ஷன் பிளான் என்ற ஒரு புதுமையான வருடாந்திர தயாரிப்பை அறிமுகப்படுத்தியது, இது வாங்கும் போது நிச்சயப்படுத்தப்பட்ட வட்டி விகிதத்தில் உத்தரவாதமான வழக்கமான வாழ்நாள் ஓய்வூதியத்தை வழங்குகிறது. மற்ற நிலையான வருமானக் கருவிகளின் வட்டி விகிதங்களில் ஏதேனும் ஏற்ற இறக்கம் ஓய்வூதியத் தொகையைப் பாதிக்காது.
ஜாயின்ட் லைஃப் விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், வாடிக்கையாளர்கள் தங்கள் மனைவி/கணவர் இல்லாத பிறகு அதே உத்தரவாதமான வழக்கமான வருமானத்தைப் பெறுவதையும், நிதி ரீதியாக சுதந்திரமாக இருப்பதையும் உறுதிசெய்ய முடியும். ஐசிஐசிஐ ப்ரு கேரன்டீட் பென்ஷன் பிளான் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது, இந்த ஆண்டின், ப்ராடக்ட் ஆப் தி இயர் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் ஆல் ஓய்வு மற்றும் ஓய்வூதிய பிரிவில், தயாரிப்பு கண்டுபிடிப்புக்கான உலகின் மிகப்பெரிய நுகர்வோர் வாக்களித்த விருதான “2021-ம் ஆண்டின் தயாரிப்பு” விருது இதற்கு வழங்கப்பட்டுள்ளது.



