ஐசிஐசிஐ ப்ரூடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ மொபைல் ஆப் ஆனது 1 மில்லியன் பதிவிறக்கங்கள் என்ற முக்கியமான மைல்கல்லை கடந்து சாதனைபடைத்துள்ளது.
இந்த வெற்றியானது வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் பாலிசிகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வசதியை குறிக்கிறது. அதோடு, அப்ளிகேஷனில் கிடைக்கும் புதுமையான மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட அம்சங்களுக்கு இது ஒரு சான்றாகும்.
வாடிக்கையாளர்கள் தங்கள் கொள்கைகள் பற்றிய தகவல்களை அணுகுவதற்கும், மொபைல் நெட்வொர்க் கனெக்டிவிட்டி இல்லாவிட்டாலும் சேவை கோரிக்கைகளைத் தொடங்குவதற்கும் – முடிப்பதற்கும் நிறுவனம் அதன் மொபைல் ஆப்பினை மேம்படுத்தியுள்ளது.
இப்போது, வாடிக்கையாளர்களின் ஒவ்வொரு நான்கு சேவை பரிவர்த்தனைகளில் ஒன்று மொபைல் செயலியில் மேற்கொள்ளப்படுகிறது.
ஐசிஐசிஐ ப்ரூடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி மணீஷ் துபே கூறும்போது, “கோவிட்-19 தொற்றுநோய் அச்சுறுத்தலானது டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு ஊக்கத்தை அளித்துள்ளது.
வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட அமைப்பாக இயங்க விரும்புகிறோம். அதோடு, வாடிக்கையாளர் களுடனான ஈடுபாட்டின் அளவை அதிகரிக்கவும், அவர்களின் உடனடி தேவைகளைப் பூர்த்தி செய்யவும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகிறோம்.
புதுமையான மற்றும் மேம்படுத்தப்பட்ட மொபைல் ஆப் ஆனது, வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய எப்போதும் இயங்கும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்” என்றார்.



