கோவை மாவட்ட நிர்வாகம், கொடிசியா மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து கோவையில் புத்தகத் திருவிழாவை, வரும் 22 முதல் 31-ம் தேதி வரை கொடிசியா அரங்கில் நடத்துகின்றன. காலை 10 மணி முதல் 8 மணி வரை பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் செய்தியா ளர்களிடம் கூறியதாவது: கோவை புத்தகத் திருவிழா 5 ஆண்டுகள் நடைபெற்ற நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக நடத்த இய லாமல் போனது.
இந்தாண்டு புத்து ணர்ச்சியுடன் 6-வது ஆண்டாக புத் தகத் திருவிழா நடைபெறும். 10 நாள் நடைபெறும் விழாவில் 300-க்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள் பங்கேற்கின்றனர். 2 லட்சம் புத்த கங்கள் இடம்பெற உள்ளன.
புத்தக விழாவை அமைச்சர் செந்தில்பாலாஜி துவக்கி வைக்கிறார்.
ஒரு லட்சம் மாணவ, மாணவிக ளுடன் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
வரும் 28-ம் தேதி 5 ஆயிரம் மாணவர்கள் ஒரே நேரத்தில் இணைந்து திருக்குறள் வாசிக்க உள்ளனர். ஒவ்வொரு நாளும் மாலை யில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற உள்ளன.
புத்தகத் திருவிழாவில் இளம் படைப்பாளர்களுக்கு விருதுகளும், வாழ் நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட உள்ளது. சாலமன் பாப்பையா பட்டி மன்றம் நடைபெற உள்ளது.
பல்வேறு சிறப்பு அழைப்பாளர்கள் வருகை தர உள்ளனர். கொரோனா கட்டுப்பாட்டு விதிமு றைகளை பின்பற்றி புத்தகத் திருவிழா நடைபெறும். இவ்வாறு அவர் கூறி னார்.



