fbpx
Homeபிற செய்திகள்கோவை மாவட்ட பள்ளி மாணவர்களுக்கான கோகோ போட்டி- எம்.டி.என் ஃபியூச்சர் சிபிஎஸ்சி மேல்நிலைப்பள்ளி சாம்பியன்

கோவை மாவட்ட பள்ளி மாணவர்களுக்கான கோகோ போட்டி- எம்.டி.என் ஃபியூச்சர் சிபிஎஸ்சி மேல்நிலைப்பள்ளி சாம்பியன்

தியாகி என்.ஜி ராமசாமி நினைவு விளையாட்டுக் கழகம் சார்பாக 26-வது ஆண்டாக, இப்பள்ளி மைதானத்தில், கோவை மாவட்ட பள்ளி மாணவ, மாண விகளுக்கு இடையேயான கோகோ, கையுந்து பந்து, கூடைப்பந்து, கபடி, பூப்பந்து போட்டிகள் 3 நாட்கள் நடந்தன.

இதில் 66 பள்ளிகளில் இருந்து சுமார் 2310 பேர் கலந்து கொண்டனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு சுழல் கோப்பையும், தனிநபர் பரிசாக விளையாட்டு உபகரணங்கள், சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு கேடயம் அதனைத் தொடர்ந்து கல்வி ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டது.

கோகோ இறுதி போட்டியில் எம்.டி.என் ஃபியூச்சர் சிபிஎஸ்சி மேல்நிலைப்பள்ளி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. சுழல் கோப்பை, தனிநபர் பரிசும், ஒட்டுமொத்தமாக சிறந்த அணியாக வெற்றி பெற்று கோப்பையும் கைப்பற்றியது.

அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குனர் கண்ணப்பன், தியாகி என்.ஜி.ஆர் நினைவு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் சதாசிவன் உள்ளிட்டோர் போட்டி துவக்க விழாவில் பங்கேற்றனர்.

சிறப்பு விருந்தினர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஃபுட் ப்ராசசிங் இண்டஸ்ட் ரீஸ் உரிமையாளர் தனசேகர், கொடி ஏற்றினார். மௌனசாமி, மற்றும் ராமசாமி, போட்டிகளை துவக்கி வைத்தனர்.

இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், மருதாசலம், தினேஷ்குமார், மனோகரன், நித்யானந்தம், சரவணன் வித்யாசாகர், அமிர்தராஜ், லட்சுமணன், ரமேஷ், கிருஷ் ணசாமி, செல்வா,விஸ்வநாதன், தனபால், தலைவர் அமிர்தராஜ், செயலாளர் பத்ம நாபன், பொருளாளர் அசோக்குமார் உள்ளிட்டோர் போட்டி ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img