fbpx
Homeபிற செய்திகள்கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஆய்வுக்கூட்டம்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஆய்வுக்கூட்டம்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, பேரவை முன் வைக்கப்பட்ட ஏடுகள் குழு தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் உறுப்பினர்களாகிய அப்துல் வஹாப் (பாளையங்கோட்டை), அமலு (குடியாத்தம்), பெரியபுன்னான் (எ) செல்வம் (மேலூர்), பொன்னுசாமி (சேந்தமங்கலம்), நல்லதம்பி (கெங்கவல்லி), தேன்மொழி (நிலக்கோட்டை) ஆகியோர் முன்னிலையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

அருகில் மாவட்ட கலெக்டர் சமீரன் கூடுதல் செயலாளர் நாகராஜன், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலெட்சுமி, பதிவாளர் தமிழ்வேந்தன் மற்றும் பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img