கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.50-க்குட்பட்ட மீனா எஸ்டேட் பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் திடீர் ஆய்வு செய்து குடிநீர் தேக்க தொட்டிக்கு செல்லும் குழாயில் உள்ள நீர்க்கசிவினை போர்க்கால அடிப்படையில் உடனடியாக சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டுவர மாநகராட்சி பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.
உடன் உதவி செயற்பொறியாளர்கள் புவனேஸ்வரி, ராமசாமி, சுந்தர்ராஜன், உதவி நகரமைப்பு அலுவலர்கள் ஜெயலட்சுமி, பாபு, சுகாதார அலுவலர் ராமச்சந்திரன், முருகா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.



