fbpx
Homeபிற செய்திகள்‘நான் முதல்வன்’ திட்டத்தில் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி: 150 அரசு பள்ளிகளை தத்தெடுத்த 40 கல்லூரிகள்

‘நான் முதல்வன்’ திட்டத்தில் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி: 150 அரசு பள்ளிகளை தத்தெடுத்த 40 கல்லூரிகள்

கோவை மாவட்டம், பாரதியார் பல்கலைக் கழகத்தில் நேற்று (ஜூன் 29) “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ், தமிழக அரசின் சிறப்புத் திட்ட அமலாக்கத் துறையும், பள்ளிக்கல்வித் துறையும் இணைந்து நடத்திய கல் லூரிக்‌ கனவு எனும்‌ தலைப்பில் பிளஸ் 2 வகுப்பு மாணவ, மாணவி களுக்கான உயர்கல்வி வழி காட்டி நிகழ்ச்சி நடந்தது.

மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தலைமை தாங்கி பேசி யதாவது:
முதல்வரின் கனவு திட்டமான “நான் முதல் வன்” திட்டத்தின் கீழ் பிளஸ் 2 வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி மற்றும் கருத்தரங்கு மிக வும் பயனுள்ளதாகவும், வாழ்க்கைக்கு வழிகாட்டும் விதமாகவும் இருக்கும்.

அண்ணா பல்கலைக் கழகம், பாரதியார் பல் கலைக்கழகம், வேளாண்மை பல்கலைக்கழகம் ஆகிய வற்றை சார்ந்த 40 கல்லூரிகள் 150 அரசுப் பள்ளிகளை தத்தெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைபெற்றது.

இரண்டு வருடம்
இந்த ஒப்பந்தத்தின் கீழ் வருகின்ற இரண்டு வருடங்களுக்கு இப்பள் ளிகளை தத்தெடுத்து, பள்ளி மாணவர்கள்‌ படிப்பில்‌ மட்டுமல்லாது வாழ்க்கையிலும்‌ வெற்றியா ளராகும்‌ வகையில்‌ பல்வேறு பயிற்சிகள் வழங் கப்படவுள்ளன.

இத்திட்டம் தொடர் பாக பல்கலைக்கழகம், கல்லூரிகளுக்கு ஆலோச னைகள் வழங்கப்பட்டு 10 நாட்களில் பல்வேறு கல் லூரிகள் ஆர்வத்தோடு முன்வந்து, இந்த புரிந் துணர்வு ஒப்பந்தம் மேற் கொள்ளப்பட்டுள்ளது. இரண்டு வருடங்களுக்கு பள்ளிகளை கல்லூரிகள் தத்தெடுக்கும்.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் சிறப்பாக பணியாற்றிய கல்லூரிகளுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன. மிகவும் சிறப்பாக செயல் படும் கல்லூரி முதல்வர் பாராட்டுகள் பெற வாய்ப்பு உள்ளது. இன்றைய பள்ளி மாணாக்கர்கள் தான் நாளைய கல் லூரி மாணாக்கர்கள்.

எனவே, பள்ளியிலேயே அவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல், பயிற்சிகள் வழங்கும்போது வருங்காலத்தில் திறமை யான மாணாக்கர்களை உருவாக்க முடியும். இந்த ஒப்பந்தத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கலைக் கல்லூரிகள், இன்ஜினியரிங் கல்லூரிகள் உள்ளிட்ட ப ல்வேறு கல்லூரிகள் பங்கு கொண்டுள்ளன.

இக்கல்லூரிகளின் செயல்பாடுகள் குறித்து ஒவ்வொரு மாதமும் ஆய்வு மேற்கொள்ளப்படும். வரு கின்ற நாட்களில் இன்னும் கூடுதலான கல்லூரிகள் இந்த ஒப்பந்தத்தில் இ¬ ணய விருப்பம் தெரி வித்துள்ளனர்.

“நான் முதல்வன்” திட்டத்தின் கீழ், போலாம் ரைட், 9- மற்றும் 11-ம் வகுப்பு மாணாக்கர்களுக்கு, கல்லூரி, அறிவியல் பொருட்காட்சி, அறிவியல் கல்லூரி உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து சென்று, மாவட்ட ஆட் சியரும் அவர்களுடன் கலந்துகொண்டு உரையா டும் நிகழ்ச்சி இதுவரை 7 முறை நடைபெற்றுள்ளது.

மாநகராட்சி பள் ளிகளில் படிக்கும் மாணாக் கர்களுக்கு பயன்படும் வகையில் கனவு மெய்ப் படவேண்டும் என்ற திட்டத்தை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத்துறை அமைச்சர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

அதன் ஒருபகுதியாக அரசுப் பள்ளிகளை தத்தெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் அரசுப் பள்ளிகளை தத்தெடுக்கும் திட்டத்தினை நமது மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்த வேண்டும். வேறு எந்த மாவட்டத்திலும் இந்த மாதிரி ஒரு முயற்சி எடுக்கப்படவில்லை.

பிற மாவட்டங்களுக்கு முன்னோடியாக நம் மாவட்டத்தில் இத் திட்டம் சிறப்பாக தொடங்கப் பட்டுள்ளது. கல்வி, மருத்துவம், தொழில் முனைவோர்களின் தொ¬ லநோக்கு பார்வை என பல்வேறு வகையில் கே £வை மாவட்டம் முன் மாதிரி மாவட்டமாக திகழ் கிறது.

அந்த வகையில் இந்த திட்டத்திலும், சிறந்து விளங்கும் என்பதில் ஐய மில்லை என்றார் ஆட் சியர். அதனைத்தொடர்ந்து, உயர்கல்வி, போட்டி தேர்வுகள், தொடர்பாக பள்ளி மாணவ, மாண விகளின் வினாக்களுக்கு மாவட்ட ஆட்சியர் விளக் கத்தை கூறி அவர்களுடன் கலந்துரையடினார்.

மாணவ, மாண விகள் உயர்கல்வி பயில கல்விக்கடன் பெறுவதற் கான வழிமுறைகள் தொடர்பாக விளக்கம் அளிக்கும் வகையில் தேசிய மயமாக்கப்பட்ட முன்னணி வங்கிகள் அரங்குகள் அ¬ மத்திருந்தன.

நிகழ்ச்சியில் பாரதி யார் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் முருகவேல், முதன்மைக் கல்வி அலுவலர் ந.கீதா, விரிவாக்கம் மற்றும் வேலை வழிகாட்டித்துறைத் தலை வர் மற்றும் பேராசிரியர் முனைவர் அ.விமலா மற்றும் கல்லூரி, பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img