கோவையில் அதிக அளவில் கஞ்சா விற்பனை யில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் என்றும் இருசக்கர வாகன திருட்டை தடுக்க மாவட்ட டிஎஸ்பி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டிருப்பதாகவும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோவை மாவட்டம், சூலூர் அருகே மொத்தமாக பிடிபட்ட 50 கிலோ கஞ்சா பொட்டலங்களை சூலூர் காவல் நிலையத் தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் நேரில் பார்வையிட்டார்.
அப்போது கருமத்தம்பட்டி காவல் அதிகாரி ஆனந்த் ஆரோக் கியராஜ், சூலூர் காவல் ஆய்வாளர் மாதைய்யன், உதவி ஆய்வாளர்கள் ராஜேந்திர பிரசாத், நவ நீதகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்க ளிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் கூறிய தாவது: கடந்த ஒரு மாதத்தில் கோவை மாவட் டத்தில் மட்டும் 130 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 225 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. கஞ்சா வழக் குகளில் 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கஞ்சா எங்கிருந்து வருகிறது, யார் சப்ளை செய்கிறார்கள் என்பதை கண்டறிய தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத் தப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் 3 டன் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
செயின் பறிப்பு மற்றும் இருசக்கர வாகனத் திருட் டுகளை தடுக்க ஒவ்வொரு உட்கோட்டங்களிலும் டி.எஸ்.பி தலைமையில் தனிப்படை செயல்பட்டு வருகிறது. அதிக அளவில் கஞ்சா விற்பனையில் ஈடுப டுவோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய நட வடிக்கை எடுக்கப்படும்.
கருமத்தம்பட்டி உட்கோட் டத்தில் அதிக அளவு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நால்வர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது.
ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் மாணவர்களை நல்வழிப்படுத்த ஒவ்வொரு காவல் நிலையத்திலும் லேப் டாப் மற்றும் இருசக்கர வாகன வசதிகளுடன் பெண்கள் உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மையத்தின் பெண் காவலர்கள் பள்ளிகளை தொடர்பு கொண்டு மாணவர்களுக்கு சரியான வழியில் செல்ல அறிவுரை வழங்கி வருகின்றனர். தவறான வழியில் செல்லும் மாணவர்களை குற்ற வாளிகளாக பார்க்கக் கூடாது.
அவர்களை நல்வழிப்படுத்தும் பணியில் காவல்துறையினர் தொடர்ந்து ஈடுபடுவார் கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.



