fbpx
Homeபிற செய்திகள்ரூ.7.77 கோடியில் திட்டப்பணிகள்: தர்மபுரியில் நகராட்சி கூட்டத்தில் ஒப்புதல்

ரூ.7.77 கோடியில் திட்டப்பணிகள்: தர்மபுரியில் நகராட்சி கூட்டத்தில் ஒப்புதல்

தர்மபுரி நகரில் ரூ.7.77 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் மேற்கொள்ள நகராட்சி கூட்டத் தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. தர்மபுரி நகராட்சி கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள அண்ணா கூட்ட அரங்கில் நடை பெற்றது.

நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது தலைமை தாங் கினார். நகராட்சி துணைத் தலைவர் நித்யா அன்பழகன், நக ராட்சி பொறியாளர் ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நகராட்சி ஆணையாளர் சித்ரா சுகுமார் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து பேசினார். தர்மபுரி நகரில் ரூ.1.50 கோடி மதிப்பில் பஸ் நிலைய மேம்பாட்டு பணிகள், 10-வது வார்டு அரிச் சந்திரன் மயான வளாகத்தில் ரூ.1.50 கோடி மதிப்பில் எரிவாயு தகனமேடை, ரூ.58.50 லட்சம் மதிப்பில் கலைஞரின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 7 திட்டப்பணிகள், ரூ.72 லட்சம் மதிப்பில் நகராட்சிக்கு 3 புதிய வாகனம் வாங்குதல், தர்மபுரி சந்தைப்பேட்டையில் ரூ.2.50 கோடி மதிப்பில் அறிவுசார் மையம் மற்றும் நூலகம் அமைத் தல் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளை ரூ 7.77 கோடி மதிப்பில் மேற்கொள்ள நகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் அளிக் கப்பட்டது.

பள்ளி மேலாண்மைக் குழு
கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன் சிலர்கள் பேசுகையில், தர்மபுரி நகராட்சி பகுதியில் உள்ள14 நகராட்சி தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றிற்கு பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களாக, அந்தந்த பகுதி கவுன்சிலர்களை நியமிக்காமல் வேறு பகுதி கவுன்சிலர்களை மாற்றி நியமித்துள்ளனர்.

இந்தக் குழப்பமான நியமனங்களை மாற்றி அந்தந்தப் பகுதி மற் றும் அருகிலுள்ள பகுதி கவுன்சிலர்களை இணைத்து பள்ளி மேலாண்மைக் குழு உறுப் பினர்களாக நியமனம் செய்ய வேண்டும் என்று கூறினர்.

11-வது வார்டு திமுக கவுன்சிலர் முருகவேல் பேசுகையில், குமாரச £மிப்பேட்டை பகுதியில் குடிநீர் தொட்டி அமைத்து பல நாட்கள் ஆகியும் மின் இணைப்பு வழங் கப்படாமல் உள்ளது. அந்த மின் இணைப்புக்கு நகராட்சி சார்பில் கட்டணம் உடனே செலுத்தி மின்சாரம் பெற்றுத் தர வேண்டும்.

இல்லையெனில் நான் என் சொந்த பணத்தை தருகிறேன் மின் இணைப்பு பெற நடவடிக்கை எடுங்கள் என்றார்.

இதற்கு பதில் அளித்து நகராட்சி ஆணையாளர் பேசுகை யில், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் நியமனத்தில் உள்ள குளறுபடிகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

குமாரசாமிப்பேட்டையில் நக ராட்சி குடிநீர் தொட்டிக்கு உடனடியாக மின் இணைப்பு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img