fbpx
Homeபிற செய்திகள்42வது தேசிய மூத்தோர் தடகள போட்டிகள்: 3 தங்கப்பதக்கம் குவித்து அசத்திய டாக்டர் லட்சுமி லோகநாதன்

42வது தேசிய மூத்தோர் தடகள போட்டிகள்: 3 தங்கப்பதக்கம் குவித்து அசத்திய டாக்டர் லட்சுமி லோகநாதன்

42வது தேசிய மூத்தோர் தடகள போட்டிகள் &2022 ஏப்ரல் 27ம் தேதி முதல் மே மாதம் 1ம் தேதி முடிய சென்னையில் நடைபெற்றது. இதில் 26 மாநிலங்களைச் சேர்ந்த 3500க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் போட்டிகளைத் துவக்கி வைத்தார்.
35வயது முதல் 100 வயது பிரிவு வரையிலான போட்டிகள் நடைபெற்றன. ஓடுதல், தாண்டுதல், எறிதல், தொடர் ஓட்டம் போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. ஒரு போட்டியாளர் தொடர் ஓட்டம் தவிர்த்து 3 போட்டிகளில் மட்டுமே கலந்து கொள்ளலாம்.

அவ்வகையில் 3 போட்டிகளில் கலந்து கொண்டு டாக்டர் லட்சுமி லோகநாதன் தங்கப்பதக்கங்கள் குவித்து சாதனை படைத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: உயரம் தாண்டுதல், ட்ரிபிள் ஜம்ப், போல் வால்ட் ஆகிய மூன்று போட்டிகளிலும் தங்கப்பதக்கம் வென்றுள் ளேன்.

2003ம் ஆண்டு முதல் இன்று வரை மூத்தோர் தடகளப் போட்டிகளில் மாவட்டம், மாநிலம், தேசியம், ஆசிய நாடுகள் மற்றும் உலக நாடுகளுக்கிடையேயான போட்டிகளில் கலந்து கொண்டுள்ளேன்.

எட்டு முறை ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் சீனா, ஜப்பான், தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, தைவான் ஆகிய நாடுகளில் நடந்த போட்டிகளிலும் பங்கேற்று பல பதக்கங்கள் வென்றுள்ளேன்.

2009 லாட்டி பின்லாந்து மூத்தோர் உலக அளவு போட்டியில் வெண்கலப் பதக்கமும் பெற்றுள்ளேன். தற்பொழுது நடை பெற்ற போட்டியில் தமிழ்நாடு அணி சிறப்பாக செயல்பட்டு ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றுள்ளது.

உடல் நலம் காக்க அனைவரும் உடற்பயிற்சி, நடைபயிற்சி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img