பெண்குழந்தைகள் கல்வி கற்று, ஏதேனும் ஒரு பட்டப் படிப்பாவது முடிக்க வேண்டும். கல்வி ஒன்று தான் உயர்வு தரும். கிராமத்தில் உள்ள அனைத்து பொதுமக்களும் அவரவர் குழந்தைகளை கல்வி கற்க வைக்க வேண்டும் என்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி பேசினார்.
விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட புல்வாய்க்கரை கிராம ஊராட்சியில் நேற்று (மே 1) உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, கிராமசபைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தலைமை யில் நடைபெற்றது.
இக்கிராமசபைக் கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விபரங்கள் குறித்தும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் – ஐஐ, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், சுகாதாரம் (பள்ளி கழிப்பறைகள் மற்றும் அங்கன்வாடி மையக் கழிப்பறைகள்), ஊட்டச்சத்து இயக்கம், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடை செய்தல், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் திட்டம், வேளாண்மை – உழவர் நலத்துறை, நமக்கு நாமே திட்டம், மகளிர் திட்டம், குழந்தைகள் அவசர உதவி எண், முதியோர் உதவி எண் மற்றும் விவசாயிகள் கடன் அட்டை உள்ளிட்ட பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
புல்வாய்க்கரை கிராமத்தில் வீட்டு வரி, நூலக வரி, தொழில்வரி, குடிநீர் வரி, உரிமக் கட்டணம், பல்வகை, வரைபட அனுமதி, டெண்டர் செட்யூல்டு, வைப்புத்தொகை, மாநில நிதிக்குழு மானியம் உள்ளிட்ட பணிகளுக்கு மொத்த வரவு தொகை ரூ.2,72,435. ஆரம்ப இருப்பு தொகை ரூ.25,047.79. ஆக மொத்தம் வரவு தொகை ரூ.2,97,482.79.
அதில், ஓய்வூதியம், பயணப்படி, மதிப்பூதியம், தெரு விளக்கு, விசைப்பம்பு, பைப் லைன், நிரந்தர பயணப்படி, அமர்வுப்படிகள், நிர்வாக செலவு, வங்கி கமிஷன், சிறு மின்விசை பம்பு, குழு காப்பீடு, வைப்புத்தொகை, புதிய மோட்டார் உள்ளிட்ட பணிக ளுக்கு ரூ.2,87,984.60 செலவாகி உள்ளது. மீதி இருப்புத்தொகை ரூ.9498.19 உள்ளதாக தெரிவி த்தனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, இன்று விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடை பெற்று வருகிறது.
இந்தக் கிராம சபைக் கூட்டத்தில், ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையையும், பொறுப்புணர்வை ஊக்குவித்தல், வளர்ச்சித் திட்டங்களை திட்டமிடுதல் மற்றும் செயல்ப டுத்தப்படுதல் மற்றும் பயனா ளிகளின் விருப்பத்தின்படி பொதுமக்களின் பங்களிப்பை மேம்படுத்துதல் மற்றும் சமூக தணிக்கைக்கு வழி வகுத்தலே கிராம சபைக் கூட்டதின் நோக்க மாகும்.
நான் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்று, முதன்முதலாக பார்த்த கிராமங்களில் புல்வாய்க்கரை கிராமமும் ஒன்று. இந்த புல்வாய்க்கரை ஊராட்சி மன்றத் தலைவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
கிராம சபை என்பது அரசு அதிகாரிகள், ஊராட்சி மன்றத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் அனைவரும் உங்களுக்கு சேவை செய்வதற்கு தான் நீங்கள் எங்களுக்கு அதிகாரம் அளித்துள்ளீர்கள்.
எனவே, நாங்கள் உங்கள் கிராமத்திற்கு என்னென்ன அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தோம் என்று உங்களுக்கு தெரிவிக்க வேண்டியது எங்களுடைய கடமை. அதைபோல் உங்கள் கிராமத்திற்கு என்னென்ன வசதிகள் தேவை என்பது குறித்து எங்களுக்கு தெரிவிக்க வேண்டியது உங்கள் கடமை.
பள்ளி மேலாண்மைக் குழு திட்டம்
பள்ளி மேலாண்மைக்குழு என்பது ஓர் அருமையான திட்டம். இத்திட்டத்தில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் களில் பெண்களுக்கு சரிபாதி வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. தங்கள் ஊராட்சியில் உள்ள பள்ளியின் வளர்ச்சியில் அக் கறை செலுத்தும் போது மேலும் சிறப்பாக மேம்படுத்த முடியும்.
அரசு பள்ளிகள் நம் பள்ளிகள் அதன் வளர்ச்சி நமது சமுதாயத்தின் வளர்ச்சியாக இருக்கும். அதைபோல் தற்போது தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளுக்கு கணினி வசதிகள், ஸ்மார்ட் வகுப்புகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மாணவர்களுக்கு வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு அவர்களின் திறன்களை ஊக்குவித்து வருகிறோம். எந்த மாநிலத்தில் இல்லாத வகையில் தமிழகத்தில் பள்ளி கல்வித்துறை மூலமாக இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுத்தி வருகிறோம். இந்த திட்டத்தில் கிராமத்தில் உள்ள அனைத்து மாணவர்களும் இணைந்து கல்வி பயில வேண்டும்.
குறிப்பாக பெண்குழந்தைகள் கல்வி கற்று, ஏதேனும் ஒரு பட்டப்படிப்பாவது முடிக்க வேண்டும். கல்வி ஒன்று தான் உயர்வு தரும். இந்த கிராமத்தில் உள்ள அனைத்து பொதுமக்களும் அவரவர் குழந் தைகளை கல்வி கற்க வைக்க வேண்டும் என்றார்.
சுகாதாரத்துறை மூலமாக மக்களை தேடி மருத்துவம் மற்றும் வேளாண்மைத்துறை மூலமாக கிஷான் கிரெடிட் கார்டு, பிரதம மந்திரி காப்பீடு திட்டம் ஆகியவற்றில் இணைந்து பயன்பெறுமாறு ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக, வேளாண்மைத் துறை மற்றும் தோட்டக்கலைத் துறைகள் மூலமாக அமைக்கப் பட்டிருந்த கண்காட்சி மற்றும் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை மூலமாக அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியினையும் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி பார்வையிட்டு, மரக்கன்றினை நட்டு வைத்தார்.
சமூக இடைவெளி அவசியம்
அதனை தொடர்ந்து, புல்வாய்க்கரை கிராமத்தில் ரூ.2,68,200- மதிப்பீட்டில், புதிதாக போர்வெல் அமைத்து, நீர்மூழ்கி மோட்டார் பொருத்தி, பைப் லைன் விரிவாக்கம் செய்வதற்கான நிர்வாக அனுமதி ஆணையினை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். மீண்டும் கொரோனா பரவல் மற்ற மாநிலங்களில் அதிகரித்து வருவதால், தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.
முக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா வழிகாட்டு நெறிமு றைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். இந்த கிராமசபை கூட்டத்தை கிராமத்தின் முழுமையான வளர்ச்சிக்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர்.
இந்நிகழ்ச்சியில் அருப்புக் கோட்டை வருவாய் கோட் டாட்சியர் கல்யாணகுமார், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் உத்தண்டராமன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உமாசங்கர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சங்கர்.எஸ்.நாராயணன், ஒருங்கி ணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜம், ஊராட்சி மன்றத் தலைவர் யுவராணி, வட்டாட்சியர் சிவக் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புல்வாய்கரை ஊராட்சி பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



