வரும் ஜூலை மாதம் அமெரிக்காவில் நடக்கவுள்ள திருமதி உலக அழகிப்போட்டிக்கு இந்தியா சார்பில், சென்னையை சேர்ந்த பிளாரன்ஸ் ஹெலன் நளினி பங்கேற்கிறார்.
இவர் மும்பையில் “தி இண்டர்நேசனல் கிளாமர் ப்ராஜக்ட்” நடத்திய அழகிப் போட்டியில் பங் கேற்று ‘மிஸஸ் இந்தியா 2021-2022’ பட்டத்தை வென்றார்.
திருமதி இந்தியா அழகிப் போட்டியில் 47 போட்டியாளர்களில் 2021-ம் ஆண்டுக்கான மிஸ் இண்டர்நேஷனல் வோர்ல்ட் கிளாசிக் இந்தியா பட்டத்தை வென்றார்.
இதே போட்டியில் Glamourous acheiverஎன்ற துணைப் பிரிவிலும் கூடுதலாக ஒரு பட்டத்தையும் வென் றிருக்கிறார் நளினி.
ஜூலை மாதம், அமெரிக்காவின் ஃபுளோரி டா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் நடக்க இருக்கும் சர்வதேச போட்டிக்காக தயாராகி வரும் நளினி கூறுகையில், போட்டியில் பங்கு பெறுவதற்கு அறி வுறுத்தியது எனது இளைய மகள் சரிஹா தான். பலவிதமான சுற்றுகளை கடந்து வந்துள்ளேன்.
போட்டியின் தொடக்கத் தில் மூன்றாயிரம் நபர் கள் பங்கு பெற்றனர்.
அதிலிருந்து நாங்கள் 52 பேர் தேர்வு செய்யப்பட்டு, அதில் தமிழ்நாடு சார் பாக நான் ஒருத்தி மட்டுமே இருந்தேன்.
போட்டியின்போது நான் கொரோனாவால் மிக வும் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மனதைரியத் தாலும், குடும்ப உறுப்பினர்கள் ஊக்கப்படுத்தியதாலும் மீண்டு வந்து, போட்டியில் கடைசி சுற்றில் பங்கு பெற்றேன்.
இந்தப் போட்டி என் வாழ்நாளில் என்னால் மறக்க முடியாதது. நான் இதன் மூலமாக நிறைய மனிதர்களை சந்தித்தேன். ஒவ்வொருவரிடம் இருந்தும் எனக்கு ஓர் அனுபவம் கிடைத்தது. எனக்கு இதற்கு முன்னால் மாடலிங் துறையில் எந்த அனுபவமும் கிடையாது.
ஆனால் அங்கு பங்கு பெற்றவர்கள் அனுபவம் வாய்ந்தவர்கள்.
இந்தப் போட்டியில் உள்ள சமூக விழிப்புணர்ச் சிக்கான சுற்றில் நான் Dream and Believe foundation மூலம் படிக்கும் திறமை இருந்தும், பயில முடியாத குழந்தைகளுக்கு அதிக அளவில் நிதி திரட்டி அவர்களுக்கு உயர்தர கல்வி கிடைக்க வழிவகை செய்தேன் எனும் பீனிக்ஸ் பெண்மணி நளினி, பெண்கள் ஒரு வட்டத்துக்குள்ளே இருப்பது அவர்களை உயர்த்தாது என்றார்.



