சூலூர் ஊராட்சி ஒன் றிய துவக்கப்பள்ளியில் நடைபெற்ற பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் சூலூர் பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ்குமார் மேற்பார்வையில் நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் மார்க்கரேட் தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் தலை வர் செயலர் மற்றும் 20 உறுப்பினர்கள் தேர்ந் தெடுக்கப்பட்டனர். சௌந்திரம் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கல்வியாளராக சூலூர் பேரூராட்சி துணைத் தலைவர் சோலை கணேஷ், பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் விஜயலட்சுமி, மணி மேகலை, தேர்ந்தெடுக்கப் பட்டனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் உறுதி மொழி எடுத்துக் கொண்ட னர். உறுப்பினர்கள் அனைவருக்கும் செயல் அலுவலர் சான்றிதழ் வழங்கினார்.
நிகழ்வில் மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்



