திண்டுக்கல்லில் 8 அணி கள் பங்கேற்ற மாநில ஹாக்கி போட்டியில் கோவை பி.எஸ்.ஜி கல் லூரி அணி முதலிடம் பெற்று கோப்பையை கைப் பற்றியது.
திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கம் மற்றும் மாவட்ட ஹாக்கி சங்கம் இணைந்து மாநில அளவி லான ஹாக்கி போட்டி நடந்தது.
தமிழகம் முழுவதும் 8 அணிகள் பங்கேற்றது. திண்டுக்கல், மதுரை வாடிப்பட்டி, கோவை, தஞ்சாவூர், ராம நாதபுரம், கோவில் பட்டி ஊர்களிலிருந்து அணிகள் பங்கேற்றன.
இதன் இறுதிப் போட்டியில் கோவை பி.எஸ்.ஜி.,கல்லூரி அணி யும் வாடிப்பட்டி எவர் கிரேட் அணியும் மோதின இதில் 3:2 என்ற கோல் கணக்கில் கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி.கல்லூரி அணி வெற்றி பெற்று முதலிடம் பெற்றது.
பின்னர் நடந்த பரிச ளிப்பு விழாவிற்கு மேற்கு ரோட்டரி சங்க தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். மாவட்ட ஹாக்கி சங்க தலைவர் காஜா மைதீன், ரோட்டரி சங்க மாவட்ட கவர்னர் ஜெயக்கண், கால்பந்து கழக தலைவர் சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக மாவட்ட எஸ்.பி., சீனி வாசன் கலந்து கொண்டு பரிசு வழங்கினார். முதலிடம் பெற்ற பிஎஸ்ஜி கல்லூரி அணிக்கு கோப்பை மற்றும் ரூ.10 ஆயிரமும், இரண் டாம் இடம் பிடித்த வாடிப்பட்டி எவர் கிரேட் அணிக்கு கோப்பை மற்றும் ரூ.7 ஆயிரமும், மூன்றாம் இடம் பிடித்த திண்டுக்கல் ஜி.டி.என். கல்லூரி அணிக்கு கோப்பை மற் றும் ரூ.5ஆயிரமும் பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஹாக்கி சங்க துணைத்தலைவர் ரமேஷ் பட்டேல், ரோட் டரி சங்க செயலாளர் கலையரசன் உட்பட பலர் பங்கேற்றனர்.



