fbpx
Homeபிற செய்திகள்புலியகுளம் புனித அந்தோணியார் பள்ளி ஆசிரியருக்கு “ சேவை தென்றல் விருது”

புலியகுளம் புனித அந்தோணியார் பள்ளி ஆசிரியருக்கு “ சேவை தென்றல் விருது”

பசுமைவாசல் பவுண் டேசன்- திண்டுக்கல், தமிழ் நாடு பனைமரம் காக்கும் பாதுகாப்பு இயக்கம் – கன்னியாகுமரி, அக்னி குஞ்சுகள் அறக்கட்டளை, தஞ்சாவூர் மாவட்டம், சரஸ்வதி சேரிட்டபிள், கிச்சிப்பாளையம், சேலம் மாவட்டம் ஆகிய அமைப் புகளால் ஏப்ரல் – 29 புரட்சிக்கவி பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு பாவேந்தரின் தென்றல் விருதுகள் -& 2022 வழங்கப்பட்டன.

சமூக சேவகர்கள் பிரிவுக்கான விருதாளர் பிரிவில் கோவை புலிய குளம் புனித அந்தோணியார் உயர்நிலை பள்ளியின் உடற்கல்வி மற்றும் தேசிய மாணவர்படை அலு வலர் ஞா.ஆல்பர்ட் அலொக்சாண்டருக்கு வழங்கப்பட்டது.

மரக்கன்றுகள் நடுதல், உடல் உறுப்பு தானத்தை ஊக்குவித்தல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், தமிழக அரசின் இல்லம் தேடி கல்வியை குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்துதல், மாணவர்களுக்கு அரசிடம் இருந்து நிதி உதவிகள் பெற்று தருதல், நம் பள்ளி நம் பெருமை திட்டத்திற்காக விழிப்புணர்வு ஏற்படுத்து தல், கொரோனா பேரி டர்காலங்களில் முன் கள பணியாளராக பணியாற்றிய தோடு விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார்.

இலவச கண் பரிதோதனை முகாம்கள் நடத்தி ஏராள மான மாணவ மற்றும் பொது மக்களுக்கு கண் பார்வை கிடைக்க உதவி புரிந்துள்ளார்.

மாண வர்களுக்கு போதை மற்றும் புகையிலை உபயோகிப்பதால் ஏற்ப டும் தீமைகள்குறித்து விழிப்பு ணர்வை ஏற்படுத்தினார், சாலை விதிகளை மதிப் போம் என்ற தலைப்பில் ஊர்வலங்கள் நடத்தினார், அரசின் தூய்மை இந்தியா திட்டத்தை மாணவர்க ளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு பள்ளி சுற்று புறம் துய்மையாக இருக்க உதவிபுரிந்து வருகிறார்.

இது போன்ற பல்வேறு பணிகளை சிறப் பாக செய்து வருவதால் அவருக்கு “சேவை செம் மல்”என்ற விருதை வழங்கி கவுரவப்படுத்தி உள்ளனர்.

சான்றிதழ்கள் புதுச்சேரி அரசின் பொதுப் பணித்துறை அமைச்சர் க.லட்சுமி நாராயணனின் கையொப்பம் பெற்று இருப் பது குறிப்பிடத்தக்கது.

விருது பெற்ற ஆசி ரியரை பள்ளியின் தாளாளர் அருட்பணி பால்ராஜ், தலைமையாசி ரியை திருமதி.அமலோற்பவ மேரி மற்றும் ஆசிரிய ஆசிரியைகளும், மாணவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img