fbpx
Homeபிற செய்திகள்மார்பக புற்றுநோய், சர்க்கரை நோய் பாத பிரச்சினை கண்டறிய நவீன கருவிகளுடன் பேருந்து அறிமுகம்

மார்பக புற்றுநோய், சர்க்கரை நோய் பாத பிரச்சினை கண்டறிய நவீன கருவிகளுடன் பேருந்து அறிமுகம்

கோவை கங்கா மருத்துவமனையும், கோவை, ரோட்டரி மெட் ரோபாலிஸ் கிளப்பும் இணைந்து மார்பக புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டறிய தரம் வாய்ந்த ஹாலோஜிக் மெமோகிராம் (புரா ஜெக்ட் சக்தி –HOLOGIC -PROJECT SHAKTHI) மற்றும் சர்க்கரை நோய் பிரச்சினைகளை ஆரம்பத்தில் கண்டறிந்து கால் இழப்பை தடுத் தல் (புராஜெக்ட் வாக் ஃபார் லைப்-PROJECT WALK FOR LIFE) ஆகிய இந்த இரு திட்டத்தின் கீழ் பரிசோதனை செய்வதற்காக அதி நவீன கருவிகள் கொண்ட பேருந்தை அறிமுகப்படுத்தியது.

இது குறித்து கங்கா மருத்துவமனை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜா ஷண்முக கிருஷ்ணன் கூறி யதாவது: புராஜெக்ட் சக்தியின் மூலம் ஆரம்ப கால மார்பக புற்றுநோயை கண்டறிந்து அதற்கு சரியான தருணத்தில் மருத்துவ சிகிச்சை அளித்து பெண்களின் உயிர்களை காப்பாற்றுவது. மார்பக புற்றுநோய் பெண்களிடையே சாதாரணமாக அதிகரித்து வருகிறது.

இதை ஆரம்ப காலத்திலேயே கண்டறிந்தால் உடனடியாக குணப்படுத்தலாம். ஆனால் இந்தியாவில் அதிகளவில் மார்பக புற்றுநோய் கடைசி நேரத்தில் கண்டறியப்பட்டு குணப்படுத்த முடி யாமல் நோயாளிகள் இறக்கிறார்கள்.
இதை தடுப்பதற்காகவே இந்த புராஜெக்ட் சக்தி திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டத்தில், அதிநவீன கருவிகள் கொண்ட இந்த பேருந்தின் மூலம் பல இடங்களில் மருத்து வமுகாம்கள் நடத்தப்பட்டு, வருகிற 18 மாதத்தில் 1500 பெண்களுக்கு பரிசோதனை செய்யப்படும்.

இதனால் பெண்களிடையே மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுவதுடன், ஆரம்ப கால மார்பக புற்றுநோய் பாதித்த நோயாளிகளை கண்டறிய முடியும்.

இது தவிர இத்திட்டத்தினால் கண்டறியப்படும் நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும். இதில் கண்டறியப்பட்ட மார்பக புற்றுநோய் நோயாளிகளுக்கு தேவைப்படுகிற பரிசோதனைகளான அறுவை சிகிச்சை, கீமோதெரபி, ரேடியோதெரபி மற்றும் மார்பக மறுசீரமைப்புகள் செய்யப்படும்.

இந்த திட்டத்தின் மூலம் மார்பக புற்றுநோயை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு அவர்களுக்கு இலவச சிகிச்சைகள் அளித்து காப்பாற் றப்படுவர் என்றார்.

கங்கா மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ராஜசபாபதி புராஜெக்ட் வாக் ஃபார் லைப் பற்றி கூறியதாவது: சர்க்கரை நோய் பாத பிரச்சினை களை ஆரம்பத்தில் கண்டறிந்து கால் இழப்பை தடுத்தல் திட்டத்தின் மூலம் சர்க்கரை நோயினால் ஏற்படும் பாத புண்களை கண்டறிந்து தேவையான சிகிச்சைகளை அளித்து குணப்படுத்துவதால் கால் துண் டிப்புகள் தவிர்க்கப்படுகின்றன.

சர்க்கரை நோய் இந்தியாவில் அதிகள வில் உள்ளது. சர்க்கரை நோயினால் அவர்களுடைய பாதத்தின் உணர்ச் சிகளை அறிய முடிவதில்லை.
இதனால் அவர்களுடைய கால் புண்ணினால் ஏற்படும் வலியை உணராமல் புண்கள் முற்றி கால் துண்டிக்கப்படும் அளவிற்கு செல்கிறது. இந்த திட்டத்தின் மூலம் 1800 சர்க்கரை நோயாளிகளுக்கு இலவச பரிசோதனைகள் செய்து தேவைப்படும் நோயாளிக்கு எக்ஸ்ரே க்கள் எடுக்கப்படும்.

இதில் எந்த ஒரு நோயாளிக்கு கால்புண்கள் கண்டறியப்படுமாயின் அவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் அனைத்தும் இலவசமாக அளித்து கால் துண்டிப்பு தவிர்க்கப்படும் என்றார்.

கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் இந்த இரு திட்டங்களையும் துவக்கி வைத்து பேசினார். பரத் பாண்டியா, பிரிகால் தலைவர் வனிதா மோகன், மில்கி மிஸ்ட் இயக்குநர் அனிதா சதீஷ்குமார், சுந்தரவடிவேல் ஆகியோர் பேசினர்.-

படிக்க வேண்டும்

spot_img