கோவை மதுக்கரை வனச்சரகம், நவக்கரை பிரிவு, சோலக்கரை சுற்றுப்பகுதியில் வனம் மற்றும் காட்டு யானைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக ரயில்வே இருப்புப் பாதை பகுதியில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை அகற்றும் பணியினை மதுக்கரை வனச்சரக பணியாளர்கள் மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கத்துடன் இணைந்து ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் மேற்கொண்டனர்.
68 பைகள் (எடை சுமார் 136 கிலோ) கொண்ட பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டது.
மேலும் இந்த நிகழ்ச்சியில் கோவை கோட்ட மாவட்ட வனஅலுவலர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் மதுக்கரை வனசரக அலுவலர், ஜலாலுதீன் (இயற்கை பாதுகாப்பு சங்கத் தலைவர்), நித்தின் மணியரசு (பொதுப்பணித்துறை பொறியாளர்), ரவிக்குமார் (சௌடாம்பிகா கல்வி நிறுவனங்கள் அறக்கட்டளை), டாக்டர் சுமதி (கல்லூரி விரிவுரையாளர்), சுபாஷிணி (என்.எஸ்.எஸ், ஒருங்கிணைப்பாளர்) ஆகியோர் காட்டு யானைகள் பாதுகாப்பு பற்றியும் வனம் பாதுகாக்கப்பட வேண்டியது பற்றியும் விரிவுரை ஆற்றினார்கள்.
நிகழ்ச்சியின் முடிவாக நவக்கரை பிரிவு வனவரும் கல்லூரி மாணவியும் நன்றி கூறினார்கள்.



